உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



' தோணிமலை உற்சவம்' 125 காட்டுக் கள்ளியும் ஏகமாகச் செறிந்து அடக்குவாரில் லாத ராட்சதப் பூண்டு போல் வளர்ந்து கிடந்தன. அந்தச் சப்பாத்துக்கள்ளி மாளிகைகளில் சரசர வென்று சந்தடி செய்து சஞ்சரித்துக் கொண்டிருந்த பாம்புகள் வளைந்து ஓட, நரிகள் பாட, பேய்கள் ஆட, கோட்டான்கள் மிருதங்கம் வாசிக்க, ஆந்தைகள் ஆசீர்வதிக்க, ஓநாய்கள் உபதேசம் பண்ண, புலி கரடிகள் செப்படி வித்தைகள் செய்ய தங்களுடைய கல்யாணம், சாந்தி முகூர்த்தாதிகளை மங்களகரமாய் நடத்தி வந்தன. முட்களும் முட்கள்போலத் தைக் கும் கற்களுமே அந்தச் செழிப்பான பூமியின் முக்கிய செல்வமாயிருந்தன. பாட்டைக் கள்ளிகள் குட்டிப் பேய்கள் போல் நின்ற இந்த ஸ்மசான மத்தியில் வளப்பம் என்ற பெயருமில்லாது வரண்டு உபயோக மற்ற குட்டிச் செடிகள் நிறைந்து, கொள்ளிக்கட்டை நிறமாகவும், செத்து வெளுத்த பிணத்தின் நிறமாகவும் இருந்த பெரிய பெரிய ஜடா முனிகள் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டு நின்றாற்போல் ஐந்தாறு குன்றுகள் ஒன்றுக் கருகில் ஒன்றாய் நின்றன. அவ்விருட்டில் அவைகள் எல்லாவற்றிற்கும் மத்தியில் நின்றது தோணிமலை. அது வஞ்சகர்களுடைய நெஞ்சம் போல அளவிறந்த குகைகள் நிரம்பிய குன்று. அவற்றுள் ஒரு பெரிய குகை பேயாண்டித் தேவருடைய இரவு மாளிகை. அது அவன் தொழில்போல இருண்டிருந் தது. அதன் வாசலைச்சுற்றி கஞ்சாச் செடிகள் போடப்பட்டிருந்ததால் தூரத்துப் பார்வைக்கு அது புலப்படுவது வருத்தம். அதில் கற்கள் வைத்து அடுப்புகள் கட்டப்பட்டிருந்ததுமன்றி மனித நீளத் துக்குச் சரியாக அனேக படுக்கைகள் வெட்டப்பட்டி ருந்தன. அதில் ஒரு மூலையில் பிள்ளையார் விக்கிரகமும் மற்றொரு மூலையில் வெட்டரிவாளும் கையுமாய் ஒரு கருப்பண்ணசாமி விக்கிரகமும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மத்தியில் ஒரு பொந்தில் குடங்குடமாய்