பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



126 'கமலாம்பாள் சரித்திரம் கள் வைக்கப்பட்டிருந்தது. பேயாண்டித் தேவன் வரும்போது சந்திரன் உதயமாகிற சமயம். அவனுட அவன் தோழர்களும் வரும்போது சங்கலிக்கருப்பன் வருவதுபோல் வளை தடிகளைச் சப்தம் செய்து நரிகளை யும் ஓனாய்களையும் வெருட்டிக் கொண்டு பாம்புகளைத் தடியால் எடுத்து அலட்சியமாய் வீசியெறிந்துகொண்டு வந்தார்கள். அவர்கள் குகையில் வந்தவுடன் சுவரில் குழிவெட்டி எண்ணெய் வார்த்திருந்த தீபத்தை ஏற்ற தாங்களடித்து வந்த கொள்ளையைக் கணபதிக்குப் கருப்பண்ணனுக்கும் சூட்டம் கொளுத்தி நைவேத்தியம் செய்துவிட்டு பிறகு கள்ளெடுத்துக் குடித்துவிட்டுட் பாட ஆரம்பித்தார்கள் : எதுகுல காம்போதி ராகம் - ஏகதாளம். பேயாண்டித்தேவன் (கால்மேல் கால்போட்டு ) : வீரன் இருளன் காட்டேரி வெறியன் நொண்டி சாமுண்டி தொந்திக்கணபதி பெத்தண்ணன் தொட்டியச்சின்னான் பாவாடை நம்மதெய்வ நாமிருக்க ஊரிருக்க மாடிருக்க உண்ணச்சம்பாச் சோறிருக்க (எல்லாரும்) தில்லா லேலே லேலோ தன்னானே கையில் கன்னக் கோலிருக்க , காத்துராயன் துணையிருக்க குடிக்கக்குடம் கள்ளிருக்க, குடிக்கக்குடம் எல்லாரும் கள்ளிருக்க தோள் நமக்கு முண்டோகுறை! நமக்குமுண் கொட்டி (டோகுறை! இரவுதான் நமக்குப் பகல் நச்சத்திரம் நம்ம தீவட்டி பேய் பிசாசும் வாய்மூடும் பேயாண்டித்தேவன் பேர் சொன்னாலே மீசையை முறு க்கிக்கொண்டு தில்லாலே லேலேலோ தன்னானே எல்லாரும் )