பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பேயாண்டி தேவன் அட்டகாசம் 127 -- பெண்டுவிட்டுப் பிள்ளை விட்டு நாடு விட்டுப் பாடுபட்டு வாய்க்கால் வெட்டி வரப்பு வெட்டி பலபேராச் சேர்த்த சொத்து (எல்லாரும் நமக்காகத்தான் நமக்காகத்தான். பெண்டு பிள்ளைக்குத் தாலிப்பிச்சை நாம் கொடுத்தால் தானே யுண்டு ! இந்தப் பூமிக்கு நாமே ராஜா கனனக் கோலே நம்ம செங்கோல் (எல்லாரும்) நமக்கு முண்டோ நிகர் ! நமக்கு முண்டோ நிகர் ! இப்படி இவர்கள் பாடி ' நமக்குமுண்டோ நிகர் என்று தோள் தட்டி ஆர்ப்பரிக்கும்போது திடீரென்று பிசாசுகள் வந்தாற்போல் 'ஹே' என்று ஒரே மொத்த மாய்க் கத்திக்கொண்டு நூறுபேர் துப்பாக்கியும் கையு மாய் ஆகாயத்திலிருந்து குதித்தாற்போலக் குதித் தார்கள். அவர்களைக் கண்டவுடன் பேயாண்டித் தேவன்கூட நடுங்கிப்போய்விட்டான். வந்தவர்கள் ஒரு ஆளுக்கு மூன்று நாலுபேராய் குடி மயக்கத்தி லிருந்த பேயாண்டித் தேவனுடைய தோழர்களைக் கட்டி விலங்கிட்டு விட்டார்கள். பேயாண்டித் தேவ னுக்கு மட்டும் கள்ளின் வெறியிருந்ததேயொழிய மயக்க முண்டாகவில்லை. மந்தமாய்ப் பிரகாசித்த நிலவில் ஏறிட்டுப் பார்த்தான். முத்துஸ்வாமி அய்ய ருடைய உருவம் தெரிந்தது. உடனே அவன் அவரிடம் வந்து 'ஐயரவாளே வாருங்கோ ! அப்படியா சர்க்கார் மனுஷனாப் போய்விட்டாற் போலிருக்கிறதே' என்று சொல்லி அவர் மார்புமீது ஒரு குத்து வைக்க, அவர் பாவம் சுருண்டு கீழே விழுந்துவிட்டார். உடனே பேயாண்டித் தேவன் வைத்தியநாதய்யர் குடுமியை ஒருகையால் பிடித்துக்கொண்டு இன்னும் பத்துப் பேருடைய தலை மயிரை மற்றொருகையால் சேர்த்துப் பிடித்துக்கொண்டு தேங்காய்களை முட்டுக்கு விடுவது போல ஒன்றோடொன்றை முட்டுக்கு விடவே, வைத் தியனாதய்யர் குடுமி அவன் கையோடு வந்துவிட்டது.