பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



128 கமலாம்பாள் சரித்திரம் மற்றப் பத்துப்பேருக்குப் பலமான காயம். அதற்குள் ஐம்பது அறுபது பேராக அவன் மேல் ஹோ என்று கதறிக்கொண்டு பாய்ந்து விழ அவனும் இருப்புலக் கைகள் போன்ற தன் கைகளை நாலாபக்கமும் வீசி ஹே ஹோ என்று கர்ச்சனை செய்துகொண்டு சிலரை முகங்களை யுடைத்தும், சிலரைப் பற்களைத் தட்டியும், சிலரை மண்டைகளை நெரித்தும், தன்னாலானமட்டும் நெடுநேரம் கொடூர யுத்தம் செய்தான். ஆயினும் அவன் நூறுபேருக்கு ஒருவன் ஆதலால் என்ன செய் தும் கடைசியாய் அவர்கள் அவனைக் கட்டிப் பிடித்துக் கை கால்களில் பலமான இரும்பு விலங்கு களை மாட்டிப் பூட்டிவிட்டார்கள். உடனே அவன் 'என் கையிலும் விலங்கா!' என்று ஆக்ரோஷத்துடன் பற்களை நறநறவென்று கடித்துக் கண்களில் தீப் பொறி பறக்கக் கைகளைப் பலமாகத் திருகினான். திருகவே இரும்பு விலங்குகள் சில்லுச் சில்லாய் தெறித்து, போன இடம் தெரியாமல் போய்விட்டன. உடனே அவன் கைகளை வீசிக்கொண்டு தோள்களைத் தட்டி அட்டகாசம் செய்துகொண்டு ' வாங்களடா பயல்களா, பத்து இருபது பேராக வாருங்களடா, ஒரு கை பார்ப்போம்' என்று ஆர்ப்பரித்தான். அந்தப் போலீஸ்காரர்களுக்கு பத்து இருபது பேராக அவ னிடத்துப்போகப் பைத்தியமா? வேட்டை நாய்கள் புலிமேல் பாய்வதுபோல் மறுபடியும் எல்லாரும் ஒரே மொத்தமாய் அவன் மேல் பாய, அவன் ' போங்கடா வெறும் முண்டைகளா, இத்தனை பேராகச் சேர்ந்து ஒருத்தனைப் பிடிக்க வந்துவிட்டீர்களே. வெட்கம் கெட்ட முண்டைகளா. இப்பொழுது என்ன செய்ய வேணுமடா , முண்டைகளா?' என, அவர்கள் 'கச்சேரிக்கு வா' என்றார்கள். அவன் ' எனக்குக் காலில் விலங்கு போட்டிருக்கிறது. என்னால் நடக்க முடியாது, வேண்டுமானால் என்னைத் தூக்கிக்கொண்டு போங்கடா பயல்களா' என்று கீழே உட்கார்ந்து