உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பேயாண்டித் தேவன் அட்டகாசம் 129 கொண்டு விட்டான். முப்பது நாற்பது பேராகச் சேர்ந்து அவனைத் தூக்கிப் பார்த்தார்கள், முடிய வில்லை. பிறகு ஐம்பது அறுபது பேர் சேர்ந்து சிரமப் பட்டு அவனைத் தூக்க, அவன் ' என்னடா பயல்களா நான் என்ன செத்த பிணமா படுத்தபடி தூக்குகிறீர் களே' என்று தன்னைத் தூக்கினவர்களைக் கண்களி லும் தலைகளிலும் அடித்து வெருட்டினான். பிறகு வைத்தியநாதய்யர் தாங்கள் கொண்டு வந்திருந்த வண்டிகளில் ஒன்றை சக்கரத்தைக் கழற்றி வரச் சொல்லி அதற்குள் பேயாண்டித் தேவனை எழுந் தருளச் செய்து அதைச் சுமக்கும்படி சுற்றியிருந்த வர்களுக்குக் கட்டளையிட்டார். பேயாண்டித் தேவ னும் இவர்கள் சர்க்காரையும் பார்ப்போம் என்று அந்த வண்டிக் கூட்டில் கால்மேல் கால் போட்டு உட் கார்ந்து கொண்டு வெற்றிலை பாக்கை வாயில் போட்டுத் தின்று கொண்டும், உருவின கத்தியும் கையு மாய் வந்த போலீஸ் வீரர்மேல் வழிநெடுகத் துப்பிக் கொண்டும், தாளம் போட்டுப் பாடிக்கொண்டும் 'தூக்குங்களடா பயல்களா, தூக்குங்கள்' என்று சொல்லிக்கொண்டும் பல்லக்கு சவாரி செய்துகொண்டு போனான்.