15 - பேயாண்டித் தேவர் உலா. இவ்வித கோலாகலத்துடன் பேயாண்டித் தே னைப் பிடித்து வரும்பொழுது எந்த ஊர்ச் சிறை சாலையில் அவனை பத்திரப்படுத்துகிறது என்பதை பற்றி ஒரு ஆலோசனை நடந்தது. சப் மாஜிஸ்திரேட வைத்தியநாதய்யர் சிறு குளத்திலேயே அவனை அடைத்து விடலாமென்று அபிப்பிராயம் சொன்னார் முத்துஸ்வாமி அய்யர் ' அது அபாயத்துக் கிடமாகும் அவனைச் சேர்ந்தவர்கள் எல்லாம் ராட்சதர்கள் அவர்கள் அவ்வளவு சமீபத்திலிருக்கும் போது பேயாண்டியை வைத்துக் காப்பாற்றுவது அசாத் தியம்' என்று எடுத்துக் காட்டியத்தின்மேல் மது ரைக்கே அவனை அனுப்புவது என்று தீர்மான மாயிற்று. ஆனால் போகும் பொழுது சிறுகுளம் மார்க்க மாகப் போகவேண்டியிருந்தது. அவ்வூருக்கு ஒரு மைலுக்கப்பால் பேயாண்டித் தேவன் வருகிறான் என்ற அரவம் உண்டான உடனேயே ஆண் பெண் அடங்கலும் அவனை எதிர்கொள்ளக் கிளம்பி விட் - டது. சுப்பு எப்பொழுதுமே அழுத்தந் திருத்தமாகப் பேசுகிறவளாய் விட்டதே. இப்பொழுது அவசரத்தில் கேட்கவேண்டுமா? "யேம்பூ பேயாயியேவனைப் பியிச்சுக் கிண்டுவயா யா , யா, யா," என்றிப்படி 'பேயாண்டித் தேவனைப் பிடித்துக்கொண்டு வரு கிறார்கள் வா வா வா ' என்பதை யெல்லாம் யகர வர்க் கத்திலே தானே பேசித் தீர்த்து விட்டாள் . ஸ்திரீ களுக்கு மாப்பிள்ளை, பெண், பெண் வயிற்றுப் பேரன், பேத்தி என்றால் என்ன பிரியம் இருக்குமோ அவ்