பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



உலகில் குழந்தைகள் தான் கொஞ்சம் யோக்கியர்கள் 157 -- - நினைக்கவில்லை. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங் கின கதையாய் முடிந்ததே என்று விசனப்பட்டுக் கொண்டு தன் தம்பிமீது அடங்காக் கோபத்துடன் கோர்ட்டை விட்டு அவர் வெளியே வரும்போது பேயாண்டித்தேவனை அவனுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருஷம் தண்டனைக்கு உட்படுத்தும் பொருட்டு காவற்காரர்கள் சிறைச்சாலைக்கு அழைத் துச் சென்றார்கள். அப்பொழுது அந்தத் தேவன் முத்துஸ்வாமி அய்யரைக் கண்டு பயங்கரமான பார்வையுடன் மீசையை முறுக்கிக்கொண்டு தோள் தட்டிக் கர்ச்சித்துக் கம்பீரமாய் 'ஏ! பாப்பான் இரண்டு வருஷம் எனக்கு இரண்டு நாள்; இனி யுன்னை விடேன் வா' என்று சொல்லி அலட்சியமாய்ச் சிறைச் சாலைக்குச் சென்றான். முத்துஸ்வாமி அய்யர் அவனைக் கப்பலேற்றிக் கடலுக்கப்பால் அனுப்பிவிடலா மென்று ஆசை வைத்திருந்தார். அப்படி அவனைப் பூராவாக ஒழித்து விடலாமென்ற தைரியமில்லாவிடில் அவனுக்கு விரோதமான ஒரு பிரயத்தனமும் அவர் செய்யத் துணிந்திருக்க மாட்டார். இப்பொழுது வியாபாரம் பாதிக்கிணறு தாண்டினாற்போல ஆய் விட்டது என்று விசனப்பட்டுக்கொண்டு பேயாண்டித் தேவனால் தனக்கு சீக்கிரம் ஏதாவது தீங்கு வருவது நிச்சயம் என்ற பயம் மனதைக் கலக்க, தன் தம்பியின் நடத்தை அருவருப்பையுண்டாக்க, கொஞ்சமும் தன் சித்தம் தன்னிடமில்லாமல் திரும்பி ஊருக்கு வந்து சேர்ந்தார். வீட்டுக்கு வந்தவுடன் கமலாம்பாள் மலர்ந்த முகத்துடன் அவரை உபசரித்தும், அவர் அவளுடன் முகங்கொடுத்துப் பேசாமல் 'இதென்ன உலகம், சீ? இதில் உயிர் வாழ்வதைக் காட்டிலும் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு பிராணனை விட்டுவிட லாம்' என்று இவ்விதம் சலித்துக்கொண்டிருந்தார். இப்படியிருக்கும்போதே கமலாம்பாள் இடுப்பில் இருந்த குழந்தை இவருடைய விசனத்தையும்