பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



158 கமலாம்பாள் சரித்திரம் கோபத்தையும் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் இவரைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்ததுமன்றி இவ ரிடம் வர அதிக ஆவல் கொண்டு தன் தாயார் இடுப் பில் தரிக்காமல் கையைக் காலைக் காட்டிக் கூத்தெல் லாம் பண்ணியது. அதைக்கண்ட முத்துஸ்வாமியய்யர் தன்னையறியாமலே சிரித்துக்கொண்டு ' உலகத்தில் குழந்தைகள் தான் கொஞ்சம் யோக்கியர்கள். இன் னும் வயது வந்தால் நீ என்ன என்ன அக்கிரமங்கள் எல்லாம் பண்ணப்போகிறாயோ ' என்று தன் மனதுக் குள்ளேயே சொலிக்கொண்டு அதை வாங்குவதற் காகத் தன் கைகளை நீட்டினார். நீட்டினதுதான் தாமதம் அந்தக் குழந்தை ஒரே குதியாய்க் குதித்து அவர் தோள்மேலே தவழத் தொடங்கியது. அவர் 'மற்றவர்கள் என்னை வெறுத்துத் தள்ளினாலும் நீயா வது என்னை லட்சியம் செய்கிறாயே. உனக்கு இந்த ஜனனம் என்னத்துக்கு, என்ன பாவம் பண்ணி யிருக்கிறாயோ' என்று சொல்லிக்கொண்டே அதை மார்போடணைத்து முத்தமிட்டுக் கொஞ்சிக் குலாவி அதன் சந்தோஷத்தில் தன் விசனத்தை மறந்து அத னுடன் விளையாட, அந்தச் சிறு குழந்தை அவருடைய முகத்தைத் தடவி மூக்கைப் பரிசோதனை செய்து கண்களைத் துடைத்துக் காதில் ஜொலிக்கும் வைரக் கடுக்கனை ஆட்டியாட்டிப் பார்த்து கைகளை (ரா ரா ராமைய்யா) என்று தாமரைப் பூப்போல் மலர்த்திக் காட்டி பாலகோபால லீலைகள் எல்லாம் செய்ய, முத்துஸ்வாமியய்யரும் கமலாம்பாளும் வினோத காலட் சேபம் செய்தார்கள். இந்தக் குழந்தைக்கு நடராஜன் எனப்பெயர். அதை அவர்கள் ராஜா, நடராஜா எனச் செல்வப் பெயரிட்டழைப்பார்கள். அது அவர்களுக்கு ஓர் விசேஷ பாக்கியமாயிருந்தது. சாக்ஷாத் கோபால கிருஷ்ணனே ஆயர்பாடியில் விளை யாடினதுபோல அவர்களுடன் விளையாட வந்ததுபோலிருந்தது. இவ் விதம் வளர்பிறைச் சந்திரனைப்போல் சந்தோஷத்