உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



162 கமலாம்பாள் சரித்திரம் கிறதும், மறுபடி பத்து நிமிஷம் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருக்கிறதுமாய்க் காலம் கடத்தி னான். இவர்கள் போதாதென்று தாசி பூரணச்சந்திரோ தயமும் கூடப் புறப்பட்டுவிட்டாள். அவள் அழகு வெகு அற்புதம் ; கறுப்பாயிருந்தாலும் சந்திரன் சந் திரன் தானே. மேலும் அவள் நடக்கிறதே நாட்டிய மாக இருக்கும். பட்டிக்காட்டு சுவாமிக்குரிய இவ் விதப் பரிவாரங்களுடன் ஏகாம்பரநாதர் உலாவுக்கு எழுந்தருளினார். செவ்வந்திப்பூ மாலைகளால் சிங்காரிக் கப்பட்ட விமானத்தின் மீது இரண்டு பக்கமும் இரண்டுபேர் சாமரை வீச, நாதசுரக் கோஷ்டி முன்னே செல்ல, பாகவத கோஷ்டி பின்னே வர, மான்மழுவேந்திய கையும், கங்கை தங்கிய சடையும், மதிவதிந்த மௌலியும், கடுவமர் கண்டமும் உமை யவர் உருவமும், ' நெற்றியிற்றிகழ்ந்த வொற்றை நாட்டமும், எடுத்த பாதமும், தடுத்த செங்கையும், புள்ளியாடையும் ஒள்ளிதின் விளங்க' எளியார்க் கெளியனாயுள்ள சாக்ஷாத் கைலாசபதியே பிரத்தியக்ஷ மாய் வந்து, பாவத்தை வென்று மோக்ஷத்தைப் பெற்ற ஆத்மாவின் உண்மை நிலையை யுணர்த்தும் உருவக நர்த்தனத்தைப் புரிந்தாற்போற்றோன்ற, அக் காட்சியைக் கண்ட அவ்வூரார் அனைவரும் ஆனந்த வாரியில் மூழ்கி, மெய்மறந்து, புளகாங்கித்து, ஆடிப் பாடி. ஓடியுலாவி 'சம்போ , சங்கரா, தயாநிதே' என்று போற்றித் துதித்து, ஆனந்தத் தாண்டவம் செய் தார்கள். பாண்டவர் வனவாச காலத்து பகவான் கிருஷ்ணன் உண்ண, தூர்வாசாதி முனிவர்களெல் லாம் பசியாறியதுபோல், சிவபெருமானது ஆனந்தத் தையே தங்களது சொந்தமாய்ப் பாராட்டிக் களித்த பக்தர் கணத்தின் நிர்மலமான குதூகலத்தை முத்து ஸ்வாமியய்யரும், கமலாம்பாளும் மெய்மறந்து அனு பவித்தார்கள். ஆயினும் தங்களருகில் அந்த சமயத்தில் குழந்தையைக் காணாததில் அவர்களுக்கு உண்டான