'ஐயோ என் பெண் மீனாக்ஷியையும் காணோமே 163 - வருத்தத்துக்களவில்லை. தங்களகத்து நடராஜனுக்கு கோயில் நடராஜனைக் காட்டி அவனது சிறிய அழகிய நிஷ்களங்கமான கண்களின் மூலமாக அந்த திவ்விய காட்சியைக்கண்டு களிக்க பாக்கியம் இல்லாமற் போனதைப்பற்றி அவர்களுக்கு நிரம்ப வருத்தம். முத்துஸ்வாமியய்யர் சுவாமியைப் பார்க்கிறார், கம லாம்பாள் இடுப்பைப் பார்க்கிறார். லட்சுமியைப் பார்க்கிறார். கமலாம்பாள் கண்களில் நீர் ததும்புகிறது. முத்துஸ்வாமியய்யர் ஏறிட்டுப் பார்த்தார். அவருக்கும் துக்கம் வர, வெளியில் ததும்பி வந்த கண்ணீரை உள்ளே இழுத்துக்கொண்டார். லட்சுமி சுவாமியைப் பார்க்க நிமிர்ந்தவுடன் அவளை ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீநிவாசனுடைய கண்கள் அவளு டைய கண்களைச் சந்திக்க, இருவரும் பின் வாங்கி விட்டார்கள். உடனே லட்சுமி அம்மாளைப் பார்த்து " அம்பியைக் காணோமேயம்மா' என்று சொல்லி நிமிரவே கமலாம்பாளுக்கு அடக்க முடியாமல் கண் ணீர் பெருகிற்று. லட்சுமியும் தாரை தாரையாய் நீர் பெருக்கினாள். சுவாமி கோயிலுக்குப் போனவுடனே குழந் தையைப் பற்றி எங்கும் விசாரிக்கத் தலைப்பட் டார்கள். வீட்டுக்கு வீடு ஆள்விட்டுத் தேடினார்கள். சிறுகுளத்தில் மந்தைக்கு சமீபத்தில் ஓரமாக வீடுகள் உண்டு. அந்த வீடுகளுக்கெல்லாம் கடைசியாயுள்ள வீடு முத்துஸ்வாமியய்யருடைய தங்கை சீதாலட்சுமி அம்மாள் வீடு. அந்த வீட்டுக்கு குழந்தை நடராஜனை யாரோ எடுத்துச் சென்றதாக சமாசாரம் வெளி யாயிற்று. அதைப் பற்றிப் பின்னும் விசாரணை செய் ததில், நடராஜனை காலை ?-மணிக்கு முன் அநேகர் நான் பார்த்தேன், நான் பார்த்தேன், என்று வந் தார்கள். அதுவுமன்றி மேற்சொல்லிய வீட்டுத் திண்ணையில் சில குட்டிகள் சேர்ந்து புளியம் விரை யாடிக்கொண்டிருந்ததாகவும் அவ்விடத்தில் ஒரு