உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



164 கமலாம்பாள் சரித்திரம் குட்டி நடராஜனை எடுத்துப் போயிருந்ததாகவும் தெரியவந்தது. முத்துஸ்வாமியய்யர் முதலானவர்கள் இவ்விதம் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே சுப்ப ராய அய்யர் என்ற ஒருவர் 'ஐயோ என் பெண் மீனாட் சியையும் காணோமே' என்று அலறிக்கொண்டு வந் தார். சீதாலட்சுமி அம்மாள் வீட்டுத் திண்ணையில் விளையாடிக்கொண்டிருந்த பெண்களுடன் மீனாட்சியும் இருந்ததாகத் தெரிந்தது. நடராஜனையும் அவளையும் காணாததால், அவனை அவள் தான் எடுத்துக்கொண்டு போயிருக்க வேண்டுமென்று அங்குள்ளவர்கள் ஊகித் தார்கள். ஆனால் அவள் எங்கே எடுத்துக்கொண்டு போயிருக்கக் கூடுமென்று தெரியவில்லை. அவ்வூர் முழுவதும் குடித்தெருவு, கடைத்தெருவு, அக்கிர ஹாரம் ஒன்று பாக்கி விடாமல் எங்கும் தேடிப் பார்த் தார்கள். எங்கும் காணாமையால் நாலா பக்கமும் ஆள் விட்டு ஊருக்கு வெளியே பார்த்து வரும்படி அனுப் பினார்கள். ஊருக்கு மேற்கே போனவர்கள் இரண்டு மைல் போனவுடன் ஒரு சிறு பெண் அழுத ஓசை கேட்டது. உடனே அவர்கள் அந்த சப்தம் வந்த இடத்தை நோக்கிச் செல்லுகையில் ஒரு புதரின் மத் தியில் கால் கைகளில் எல்லாம் முட்காயம் பட்டு 'ஐயையோ அம்மா, அப்பா' என்றழுது கொண் டிருந்த ஒரு பெண் குழந்தையைக் கண்டார்கள். அவள் தான் மீனாட்சி. அவர்களைக் கண்டவுடன் அவள் ஓடிவந்து அவர்களைக் கட்டிக்கொண்டு அழுதாள். கேட்ட கேள்விக்கொன்றும் பதில் சொல்லக் கூடாமல் விம்மி, விம்மி யழுத அவளை அவர்கள் எடுத்துக் கொண்டு சமாதானம் பண்ணி தெளியச் செய்து ஊருக்குக் கொண்டுவந்தார்கள். அவள் சோர்ந்து அவர்கள் கையிலேயே நித்திரை போய்விட்டாள். வீட்டுக்கு வந்தவுடன் அவளுக்குக் குளுமோர் காய்ச்சிக் கொடுக்க அதை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அவள் அப்படியே நித்திரை போய்விட்டாள். அவள்