உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



166 கமலாம்பாள் சரித்திரம் - நாதய்யர் அந்த மனிதர்களுடைய காலடிகளைச் செவ் வையாய் அளக்கச் செய்து குறித்துக்கொண்டார். பிறகு அந்த அடிகளைத் தொடர்ந்து செல்ல அவை ஒரு காட்டுக் காளி கோயிலில் கொண்டுவிட்டன. அந்த பத்ரகாளியம்மன் கோயில் இரண்டு மலைகளுக்கு மத்தியில் இருந்தது. அந்த அம்மன் சந்நிதியில் பத்துப் பதினைந்து மரங்கள் நெருங்கி வளர்ந்திருந்தன. அவற்றின் மத்தியில் குதிரைக் குளம்பு அடையாளங் கள் போயிருந்தமையால் எல்லாரும் அங்கே போனார் கள். போகவே ஒரு கோரமான தோற்றம் அவர்கள் கண்ணுக்குத் தென்பட்டது. அதென்னவெனில், மூன்று கற்கள் வைத்து ஒரு அடுப்பும், அதனருகில் ஒரு குழந்தையின் எலும்புகளும் காணப்பட்டன. தரையில் ரத்தம் சிந்தியிருந்தது. அதைக் கண்ட வுடன் முத்துஸ்வாமியய்யர் ' ஐயையோ, நடராஜன், கொலை, பாவி' யென்று கூக்குரலிட்டார். அங்கே கிடந்த எலும்புகள் குழந்தை நடராஜனுடைய எலும்புகளாயிருக்கலாமென்று அவர்களுக்குப் பட் டது. அந்த அடுப்பின் சமீபத்தில் நெருப்பு மூட்டப் பட்டிருந்ததாகவும் நினைக்க இடமிருந்தது. உடனே அந்தக் குரூரமான துர்க்காதேவிக்கு நரபலி கொடுக் கக் குழந்தையைக் கொன்றிருப்பதாக எல்லாரும் ஊகித்தார்கள். குழந்தையை எடுத்துப்போனவர் கள் கள்ளர்களாயிருந்திருக்கும் பட்சத்தில் மீனாட்சி கழுத்திலிருந்த நகைகளை அவர்கள் அபகரித்திருப்பார் கள். ஒரு வேளை பேயாண்டித் தேவன் சிறைச்சாலை யிலிருந்து வெளிப்பட்டு குழந்தையைத் திருடிக் கொண்டு போயிருக்கலாமென்றாலோ அவன் குழந் தையைக் கொன்று பலியிட்டிருக்கமாட்டான். நர பலி கொடுப்பது அவர்களுக்குள் வழக்கமில்லை. வேறு யார் இந்தக் கொடூரமான அக்கிரமத்தைச் செய்திருப் பார்கள் என்று தெரியவில்லை. முத்துஸ்வாமியய்யர் மூர்ச்சைபோட்டு விழுந்துவிட்டார். அவரைத் தூக்கி