உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'ஆருடக்காரனை வரவழைத்துக் கேட்போம்' 167 வண்டியில் போட்டுக்கொண்டு எல்லாருமாய் சொல் லக்கூடாத வருத்தத்துடன் ஊருக்குத் திரும்பினார்கள். கமலாம்பாள் முதலானவர்கள் சமைத்ததை மூடி வைத்துவிட்டு குழந்தையைத் தேடிப்போனவர் களுடைய வரவை எதிர்பார்த்துக்கொண்டு வெகு துக்ககரமாய் உட்கார்ந்திருந்தார்கள். பத்திரகாளி கோயிலில் நடந்த விபரீத விர்த்தாந்தத்தைக் கேட்ட காலத்தில் அவர்கள் அடைந்த துயரத்தை என் னென்று சொல்லுவது. கமலாம்பாள் அலறியடித் துக்கொண்டு மூர்ச்சித்து விழுந்தாள். லட்சுமி கோவென்று கதறியழுதாள். முத்துஸ்வாமியய்யர் புலம்புவதும், அழுவதுமாய் இருந்தார். வைத்திய நாதய்யரும் அவர்களுடன் சிறிதுநேரம் துக்கித்துப் பிறகு ' அங்கே கிடக்கும் எலும்புகள் உங்களுடைய குழந்தையினுடையதாயிருக்கவேண்டு மென்பது என்ன ! உங்களுக்கு அவ்வளவு கொடிய விரோதி - யாரிருக்கிறார்கள்? அப்படியே விரோதிகள் இருந் தாலும் நரபலியிடத்தக்கவர்கள் இங்கு- யாரிருக் கிறார்கள்?' என்று பலவிதமாக ஆட்சேபணைகள் செய்து அவர்களைத் தேற்றினார். 'பலியிடப்பட்ட குழந்தை வேறாயிருந்தால் நடராஜனைத் திருடிப் போனவர்களுடைய குதிரைகள் அந்தக் காளியம்மன் கோயிலுக்குப் போயிருக்கக் காரணமென்ன' என்று முத்துஸ்வாமியய்யர் கேட்க, வைத்தியநாதய்யர் ஒரு வேளை அந்தத் திருடர்கள் நம்முடைய குழந்தை கொல்லப்பட்டதாக நாம் எண்ணும்படி வேறு எந்தக் குழந்தையினுடைய எலும்புகளையாவது அங்கே கொண்டுவந்து போட்டுப் போயிருக்கலாம் என்றார். முத்துஸ்வாமியய்யர், ' ஏது எனக்குத் தோன்றவில்லை' என்று சொல்லவே, வைத்தியநாதய்யர் ' ஆரூடக் காரனை வரவழைத்துக் கேட்போம்' என்று சொல்லி அவ்வூர் வள்ளுவனுக்குச் சொல்லி அனுப் பினார். அவன் உடுக்கையெடுத்துக்கொண்டு