இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
168 கமலாம்பாள் சரித்திரம் விரைவில் ஓடிவந்து தூப தீப நைவேத்தியங்கள் எல்லாம் செய்து உடுக்கையடித்து அவ்வூரிலிருக்கும் ஒரு மந்திரவாதி தான் நரபலி செய்தது என்று முடித் தான். உடனே அந்த மந்திரவாதிக்கு ஆள்விட்டார் கள். அவன் அவ்வூரைவிட்டு அன்று காலமேதான் போய்விட்டான் என்று சங்கதி தெரியவந்தது. உடனே அவன் தான் அந்தக் கொலைக்குக் கர்த்தா வென்று அங்குள்ளவர்கள் அனுமானித்தார்கள். உண் மையில் அங்கிருந்த வள்ளுவனுக்கும் அந்த மந்திர வாதிக்கும் விரோதம். அந்த மந்திரவாதியினுடைய தொழிலைக் கெடுப்பதற்கு இதுதான் நல்ல சமய மென்று அந்த வள்ளுவன் அவன் மேலே குற்றத் தைப் போட்டான்.