19 புத்திர சோகம். அந்த மந்திரவாதி ஊரைவிட்டுத் திடீரென்று போய்விட்டபடியால் அவ்வூரிலுள்ளவர்களெல்லோ ருக்கும் அவன் மேல் சந்தேகம் பலமாக ஏற்பட்டது. அவனைக் கண்டுபிடிப்பதற்காக சர்க்காரில் பலவித மான பிரயத்தனம் செய்தும் ஒன்றும் பலிக்கவில்லை. முத்துஸ்வாமியய்யருடைய நிலைமையோ மிகவும் பரிதபிக்கத்தக்கதாயிருந்தது. 'கண்ணிலான் பெற் றிழந்தானென,' அதாவது பிறவிக்குருடனொருவன் கண்கள் பெற்று, நூதனமாகக் கிடைத்த அந்தப் பாக் கியத்தின் மூலமாக உலகத்தின் காட்சிகளை ஆவ லுடன் கண்டு களித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் திடீரென்று அந்தக் கண்கள் பார்வையை இழந்து விடுமானால் அவனுக்கு என்ன வருத்தம் உண் டாகுமோ அந்த வருத்தத்தை முத்துஸ்வாமியய்யர் முற்றும் அடைந்தார். குழந்தையே பிறவாமலிருந்தால் ஒரே துன்பமாகப் போய்விடும். குழந்தையைப் பெற் றுப் பிரியம் வைத்து வளர்க்கும் சந்தோஷத்தை அவர் அதிகமாயறிந்து இருக்கமாட்டார். நீடித்து நிற்கும் துக்கம் மனிதனுக்கு சகஜமாய்விடும். கையில்லாமல் பிறந்தவனுடைய துன்பத்தைக் காட்டிலும் கை பெற்று இழந்தவனுடைய துன்பம் அதிகமல்லவா? கடவுள் புத்திரபாக்கியத்தைக் காட்டி ஒளித்ததினா லல்லவோ பட்டணத்துப் பிள்ளையும் உலகத்தை வெறுத்து ஞானியானார். முத்துஸ்வாமியய்யர் முன்ன மேயே உலக இன்பத்தில் அதிருப்தியும், மனிதர் நடத் தையில் அருவருப்புமுள்ளவர் என்பது நமக்குத் தெரி யும். இப்பொழுது குழந்தை போன பிறகு எல்லா விஷ யத்திலும் அவருக்கு அருவருப்பு பலமாக ஏற்பட்டது. -
பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/181
Appearance