பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



70 கமலாம்பாள் சரித்திரம் 'என்ன பாழுலகம்! என்ன பாவம் பண்ணினேனோ இந்த ஜன்மம் நமக்குக் கிடைத்தது' என்று அவர் அடிக்கடி சொல்லிக்கொள்ளுவார். சிற்சிலசமயங்களில் 'சுவாமியேது, பூதமேது, உலகமே ஒருவரையொருவர் அடித்துத் தின்கிற வியா பாரந்தான்' என்பார். 'வேண் டேன் இம்மாயப் புன்பிறவி வேண்டேனே' என்ற வாக்கியத்தைப் பலமுறை தன் மனதுக்குள் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொள்வார். யாராவது சிரித்து விளையாடிக்கொண்டிருப்பது அவர் கண் ணுக்கு எதிர்ப்பட்டால் தன் பார்வையை விலக்கிக் கொண்டு 'இதென்ன வேண்டியிருக்கிறது! ஐயோ, மூடன், மூடன்' என்று தன்னுள் சொல்லிக்கொள் வார். குழந்தையை நினைத்து விசனப்பட்டுக் கொண்டே நாலைந்து நாள் அன்னபானாதிகள் கூடச் செவ்வையாகச் செய்து கொள்ளாமல் வீட்டுக்குள் ளேயே முக்காடிட்டு துக்கித்துக் கொண்டிருப்பார். ஊராரெல்லாரும் வந்து அவருக்கு தைரியம் சொல்லு வார்கள். சொல்லியும் அவர் துக்கம் ஆறாது. கம லாம்பாள் தன்னைத் தேற்றிக்கொண்டு அவரைத் தேற்ற உத்தேசித்துச் சில சமயங்களில் வேதாந்தம் பேசுவாள். சில சமயங்களில் பாடுவாள். சில சம யங்களில் சரஸஸல்லாபங்கள் செய்வாள். சில சமயங் களில் ' குழந்தை அகப்பட்டாலும் அகப்படலாம்' என்பாள். இப்படி அவரைத் தேற்றி அவர் விசன மாறித் தெளிந்திருக்கும் சமயத்தில் அவளுக்கு அடக்க முடியாதபடி துக்கம் மேலிட்டுக் கண்ணீர் கரகர வென்று பெருகும். அப்பொழுது அவரும் கூட. அழுதுகொண்டு 'அழாதேடி' என்று அவளைத் தேற்று வார். எதைப் பார்த்தாலும் அவர்களுக்கு நடராஜன் ஞாபகம் வந்துவிடும். கொட்டாங்கச்சிகள், கயிறு கள், கொம்புகள் எல்லாம் அவர்களுக்கு அவன் ஞாபகத்தைக் கொடுத்து வருத்தும். அந்த விதமான துன்பத்தை ஒழிக்க நினைத்து அவர்கள் அவனுடைய