உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'ஐயோ நடறாஜா' 171 பட்டு வஸ்திரங்கள், நகைகள், தொட்டில், பொம்மை கள் எல்லாவற்றையும் பிறருக்குத் தானம் செய்து விட்டார்கள். அப்படி யெல்லாம் செய்தும் திடீ ரென்று எல்விதமாகவோ குழந்தை ஞாபகம் அவர் களுக்கு வந்து விடும். முத்துஸ்வாமியய்யர் பூஜை பண்ணிக்கொண்டேயிருப்பார். உலக வாழ்க்கை எப்படியாவது ஒழிந்துபோகவேண்டுமென்ற வைராக் கிய சித்தத்துடன் அவர் சுவாமியைத் தியானம் பண்ணி பரமபக்தியுடன் மணியோசை செய்து தீபா ராதனை நடத்திக்கொண்டிருப்பார். திடீரென்று குழந்தை ஞாபகம் வந்துவிடும். உடனே அவர் 'ஐயோ, நடராஜா!' என்று கதறிக்கொண்டு தீபத் தைக் கை நழுவ விட்டுவிட்டு ' ஹோ!' என்று வாய் விட்டழுவார். வீதியில் போய்க்கொண்டிருக்கும் போதே யார் குழந்தையாவது எதிரில் தென்பட்டால் துக்கம் பெருக சரசரவென்று வீட்டுக்குள் வந்து ஒரு முறை கண்களைத் துடைத்துக்கொண்டு பிறகு வெளியே போவார். சிலசமயங்களில் தெருவிலேயே நின்று அழுவார். எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்து கொண்டிருப்பார். பாதி ஸ்நானம் ஆய்க் கொண்டிருக்கும்போதே அப்படியே 'ஐயோ' என்று கதறியழுவார். கமலாம்பாளும் அப்படியே சமையல் செய்து கொண்டிருக்கும் போதும், ஸ்நானம் செய்து கொண்டிருக்கும்போதும் அழத் துவக்கி விடுவாள். துக்கம் என்பது அவள் விஷயத்தில் ஆராதித்து அழைக் கப்படவேண்டிய அன்னியனாக இல்லை. அவர்க ளுடைய குடும்பத்தில் ஐக்கியப்பட்டு, இராப்பகல் பேதமில்லாமல் நினைத்தபோது வரப்போக அதிகார முடையதாய், காலியாயிருந்த குழைந்தை நடராஜ னுடைய இடத்தைநிரப்பிக்கொண்டிருந்தது. கமலாம் பாள் தன் கணவரைத் தேற்றித் தூங்கச் செய்து, அவர் நன்றாய் நித்திரை செய்யும் நடுநிசியில் எழுந்து உட்கார்ந்து கொண்டு நடராஜனைக் குறித்துக் கண்