பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



172 கமலாம்பாள் சரித்திரம் ணீர் பெருக்குவாள். சில சமயங்களில் முத்துஸ்வாமி அய்யரும் விழித்துக்கொண்டு விடுவார். விழித்துக் கொண்டுவிட்டால் விடிய விடிய அழுகைதான். ஆனால் அவளும் அவள் கணவரும் தங்களுடைய துக்கத்தை மறந்துவிட அநேக விதமான பிரயத்தனம் செய்தார் கள். உல்லாசமாகப் பேசுவது, சிரித்து விளையாடுவது 'என்னமோ இருக்கிறவரைக்கும் சுகமாக இருந்து விட்டுப் போகவேணும் ; ஆய்விட்டது பாதி ஆயுசு, இனிமேல் ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ, இன் றைக்கோ நாளைக்கோ' என்று சொல்லிக் கொள்வது, பாடுவது முதலிய உபாயங்கள் எல்லாவற்றையும் அவர்கள் பிரயோகித்தார்கள். ஒரு நாள் ராத்திரி நிலவு சுகமாயிருந்தது. அன்றைக்குக் கமாலாம்பாளும் அவள் கணவரும் மாடியின் மீது உட்கார்ந்துகொண்டு வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். பேசிக் கொண்டிருக்கும்போதே கமலாம்பாள், 'இந்தச் சந்திர னைப் பாருங்கள், இவனுக்குத்தான் என்ன கொழுப்பு! ரிஷபம்போல் ஆகாயம் முழுவதும் நம்முடைய ராஜ் யந்தான் என்று உல்லாசமாக நமக்கு நிகரில்லை என்று திரிகிறான்' என்றாள். முத்துஸ்வாமியய்யர்-'ஆமாம், அவனுக்கு என்ன? அவனெல்லாம் தேவலோகவாசி. பூமியில் ஊரும் புழுவாகிய நம்மைப்போலவா? ஒருவனை யொருவன் அடித்துத் தின்று கொண்டு நாம் இருக்கிறோமே அது போல இவனும் இருக்கவேணுமா? கமலாம்பாள் :-' அப்படியில்லை, அதற்குக் கார ணம் உங்களுக்குத் தெரியாமற் போனால் நான் சொல் லித்தருகிறேன். கேளுங்கள். சொல்லிடுவேன், பார்த் துக்கொள்ளுங்கள். சொல்லியே விடட்டுமா? முத். அ. - ' சே! அப்படிச் செய்யாதே அம்மா, பயமாயிருக்கிறது. அப்படி எல்லாம் பண்ணிவிடாதே.