உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஆறுதல் பெற கடைபிடித்த வழிகள் பலனில்லை 173 கம:-'இதோ சொல்லப் போகிறேன். பத்திரம்! இதோ சொல்லியே விடப்போகிறேன். என்ன தெரி யுமா! ரோஹிணி, அவன் சம்ஸாரம் அவன் கிட்டவே எப்பொழுதும் இருக்கிறாளல்லவோ, அவன் கொழுப் புக்குக் கேட்க வேண்டுமா? தெரிந்ததா? இப்பொழு தாவது தெரிந்ததா? அவர்கள் இரண்டுபேரும் யாரைப்போல் இருக்கிறார்கள் சொல்லுங்கள். அதா வது தெரிகிறதோ பார்ப்போம்.' முத்.- ' ஆமடி ஆமாம்! உன்னையும் என்னையும் போல, மத்தியானமெல்லாம் அழுதது மறந்துபோய் விட்டது! கிடக்கிறது ஏதாவது பாடு பார்ப்போம்.' கம.-' பாடட்டுமா. என் பாட்டைக் கேட்டு காற்று, சந்திரன் எல்லாம் மயங்கிப் பிரமித்துப் போகும்படி பண்ணி விடுகிறேன் பாருங்கள். பனி யால் நனைந்து வெயிலாலுலர்ந்து"-சி! என்ன பாட்டு வருகிறது இந்த சமயத்திலே.' கமலாம்பாள் பாட ஆரம்பித்தவுடன் அவள் மன தில் பதிந்து கிடந்த ' பனியால் நனைந்து' என்ற அரிச் சந்திர புராணப் பாட்டு அவள் ஞாபகத்திற்கு வந்தது.. இது பாம்பு கடித்து இறந்த குழந்தை லோகிதாட் சனைக் குறித்து சந்திரமதி புலம்பியழுவதைச் சொல் லும் பாடல். தன்னையறியாமல் அந்தப் பாடல் அவள் நாவில் எழ, அவள் அதை விட்டு 'போபோவே செலியா' என்று வேறுபாட்டைத் துவக்கினாள். முத்துஸ்வாமி யய்யர் ' இது வேண்டாம் "பனியால் நனைந்து" என்ற பாட்டைத்தான் பாடவேண்டும்' என்று கட்டா யம் பண்ண, கமலாம்பாள் அதைப் பாடினாள். 'தனியே கிடந்து விட நோய் செறிந்து தரைமீதுருண்ட துரையே, இனியாரை நம்பி உயிர்வாழ்வம் இறை யோனும் யானும் அவனே" என்று பாடும் போது