பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



186 கமலாம்பாள் சரித்திரம் செஞ்சடை புனைந்து தனியே செல்ல, ' இதுவும் உனது திருவிளையாடலே' என்று பிரமிப்படைந்த பக்த கணங்கள் ஆறு, குளம், வீடுகள் தோறும் கைகூப்பி நின்று 'ஆரே உன் அதிரேகமாயை யறிவார்' என்று கடவுளைப்போற்ற; கடற்கரை யிலோ , இன்று நம்முத்தியோகம் இத்துடன் ஒழிந்தது என்று தங்களுடைய மீன் நிறைந்த வலைகளுடன் கட்டைமரங்களையும், படகுகளையும் கரையில் சேர்த் துச் செம்படவர்கள் திரைகடலோடித் தாங்கள் தேடிய திரவியத்தை, கூடையும் கையுமாய்த் தங்களை வழிபார்த்து, வந்தவுடன் கைகொட்டி நின்ற தம் பெண்டுகள் பிள்ளைகளுடன் பங்கு பகிர்ந்து நின்றனர் ஒருசார். மானினம் வருவபோன்று மயிலினந் திரிவபோன்றும் மீனின மிளிர்வபோன்று மின்னின மிடைவபோன்றும் பொம்மெனப் புகுந்த ஆங்கிலேய மாதர்கள் தோகை போன்ற உடையும், அன்னம்பொன்ற நடையும், கிள்ளை போன்ற மொழியுங்கொண்டு தங்களுடைய (அல்லது பிறருடைய) நாயகர்களோடு கைகோர்த்து, உரையாடி நகையாடினார் ஒருசார். பள்ளிக்கூடத்துப் படிக்கும் பாலர் சிலர் கங்கைக்குப்போன கடாவின் கதையாய்க் கடற் கரையிலும் புஸ்தங்களுடன் கட்டியழுதனர் ஒருசார். வாலிபக்கணவர் சிலர் தம் சிறு மனைவிமாரோடு கடல் காணத் துணிந்து. கரையை அணுக அங்கு யாரேனும் எதிர்ப்பட்டால் தம்நோக்கு அகற்றித் தலை நாணி ஏதோ குற்றம் செய்தவர் போல நெஞ்சும் மார்பும் பதை பதைக்க மணற் புறத்துப் பதுங்கினர் ஒருசார். நாடுகள் தோறும் ஓடியலையும் லாடஜனங்கள் கடலைத் தொழுது. கைகூப்பினர் ஒருசார். அடக்குவாரற்று ஆடியோடும் அலைகளையும் களிமயக்குற்றுக் கன்றுபோல் துள்ளிக் கடற்கரையில் நித்தியவசந்தம் செய்து வீசாநின்ற