உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'வெறி வெய் விதாலு' 187 வாலிபக் காற்றையும் கண்டு தாமும் உற்சாகச் செறி வுற்றுத் தனியிடமடைந்து தம்மோசையைக் கட லோசை விழுங்குமென்று துணிவேறிப் பாடத் தெரியா தாரும் பாடினர் ஒருசார். ஏராளமாய் நிறைந்திருந்த மணற்பரப்பின் மீது சிலர் மல்யுத்தம் செய்து நின்ற னர். சிலர் அங்கு வீசும் தென்றலைப்போல் ஓடியுலாவி ஓயாது அடிக்கும் அலைகளைப் போல் குதித்து விளையாடி னர். சிலர் தனியே உட்கார்ந்து தங்களது குடும்ப ரகசியங்களை அலைகளுடன் சொல்லியாற்றினர். இவ் விதம் ' வெறி வெய் விதாலு' (பயித்தியம் பலவிதம்) என்ற தெலுங்குப் பழமொழிக்கிணங்கப் பற்பல விசித்திரங்கள் நிறைந்த கடற்கரையில் ஸ்ரீநிவாசனும் லட்சுமியும் ஓர் ஓரப்புறத்தில் (ஒரு படகின் மறை வில்) நட்சத்திரங்களிழைத்த ஆகாயமாகிய முத்துப் பந்தலின் கீழ் சமுத்திர ராஜன் பாதகாணிக்கை கொடுத்துப் பாதபூஜை செய்ய, வாயுபகவான் சாமரை வீச, அனேக ஆயிரம் அலைகள் கூடி அனவரதம் முயற் சித்து இயற்றிய வெண்மணல் விமானத்தின் மீது தமக்கு நிகர் தாமேயென எழுந்தருளினார்கள். அவர் கள் உட்கார்ந்தவுடன் லட்சுமி பாடத்தொடங்கினாள். அஞ்சொற்கள் அமுதினின்று மள்ளிக் கொண்ட அவள், குயில், குழல், யாழ் இவற்றைப் பருத்த குரலு டன் பாட, ஸ்ரீநிவாசனுக்குப் பூலோகத்திலிருப்பதாக ஞாபகமே இல்லை. ' விபரந்தெரியாத அலைகள் மட்டும் சிறிது நேரமாவது சப்தம் செய்யாது இருந்தால், கடலும் காற்றும் அப்படியே பிரமித்து மயங்கி யடிமையாய்ப் போயிருக்கும்' என்றான் ஸ்ரீநிவாசன். லட்சுமி - ஆமாம் சமுத்திரம் இரையாமலிரு என் றால் இரையாமலிருக்குமாக்கும், நிரம்ப சரி' என்று அவனைத் தட்டிக்கொடுத்துக் கேலி பண்ணினாள். சிறிது நேரத்திற்கெல்லாம் சந்திரனும் வந்தது. கரகர வென்று அமிர்தகலசம்போல் எழுந்து, 'வெண்