பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கமலாம்பாள் சரித்திரம் வாத்தியாயர் உள்ளே வந்தவுடன் நமது முத்து ஸ்வாமி அய்யர் 'மாமா வாருங்கள், வாருங்கள்; குட்டி, பலகை கொண்டுவா (கலியாணி பலகை கொண்டுவர ) உட்காருங்கள், நானே அங்கே வரலாமென்றிருந்தேன்' .... அடே, யாரடா, வீரா! என்று கூவினார். உடனே வேலைக்காரனாகிய வீரன் 'சுவாமி' என்று வர, ஐயர்: 'அடே, போய் குழந்தை சுந்திரத்தைக் கூட்டிவா என்று சொல்லிவிட்டு, வாத்தியாரைப் பார்த்து, 'ஜோ ஸியரவர்களைக் கூட்டிக்கொண்டு வரச்சொல்லுகி றேன், ராகுவேளை போய்விட்டதல்லவா, இன்று என்ன, வெள்ளிக்கிழமையோ!' வாத்தியார் : ஆம் ஆம் ராகுவேளை போய் எந்தக் காலம் ஆய்விட்டதே.' அய்யர் : 'ஆம், ஆம், சனிக்கிழமை ஞாபகமாய்ச் சொன்னேன்.' அப்பொழுது பையன் சுந்தரமும் ஒரு பந்தை உருட்டிக்கொண்டு ' என் அப்பா, கூப்பிட் -டயாமே!' என்று சொல்லிக்கொண்டு வந்தான். அய்யர் : பந்து எதற்கடா? அடடா ! தாத்தா மேல் படப்போகிறது! அதைக் கையில் எடு எடு!' பையன் : புதுப்பந்து அப்பா, பெரிய களச்சிக் காய் உள்ளே வைத்திருக்கிறேன்!' 'அது இருக்கட்டும். என்ன விளையாட்டுப்புத்தி; நீ போய் சங்கர ஜோஸியரை, அப்பாவும் தாத்தாவும் -' (என்று மேல் சொல்லுவதற்குள்) எந்தத் தாத்தா?" என்று பையன் கேட்க, அய்யர், 'ஆமடா இந்தத் தாத்தா தானடா, உங்களைக் கையோடு கூட்டிவரச் சொன்னார்கள். ஏதோ அவசர காரிய மாம்" என்று சொல்லிக் கூட்டிக்கொண்டுவா' என்றார். பையன் : 'என்ன காரியம் சொல்லு.'