பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'அவர் என்னோடு ஓடமுடியுமோ.' அய்யர் : 'சொல்லுகிறேன் போ.' பையன் : 'சொன்னால் தான்.' அவர் : 'அக்காளுக்குக் கலியாணம்.' பையன் : 'அக்காளுக்குக் கலியாணமாம், உங்களை கூட்டிக்கொண்டு வரச்சொன்னார்கள் என்று சொல் லிக் கூட்டிவருகிறேன்' அவர்: 'இது ஏதடா இவன்! நீ ஒன்றும் சொல்ல வேண்டாமடா, கையோடு கூட்டிக்கொண்டு ஓடி வாடா.' பையன் : 'அவர் என்னோடு ஓடமுடியுமோ, நான் அவருக்கு முந்தி ஓட்டம்பிடித்து விடுவேனே!' அவர், 'நீ ஓடவேண்டாம் ; போய் மெள்ளக் கூட் டிக்கொண்டுவா' என்று சொல்ல, சுந்தரம் குதித்துக் கொண்டு வெளியே ஓடினான். சற்றுநேரத்திற்கெல்லாம் சிவந்த நிறமுள்ள ஒரு மனிதர் உள்ளேவந்தார். அவர் கழுத்தில் ருத்திராட்ச மும், கையில் திருப்பதிக்காப்பும், விரலில் பொன் மோதிரமும் அணிந்து கொண்டு, நெற்றியில் விபூதி சந் தனாட்சதை தரித்துக்கொண்டு கையில் ஒரு ஏடுடன் வந்தார். இவர் வந்தவுடன் அய்யர் 'வாருங்கள்' என்று ஆசனம் கொடுக்க, வாத்தியார், 'சங்கரா வா' என்று சொல்லி, 'இதோ இந்த ஜாதகங்களைப் பார்' என்று கையில் கொடுத்தார். ஜோஸியர் உட்கார்ந்துகொண்டு, 'குட்டிக்கா ஒரு கட்டு ஜாதகம் இருக்கிறதே. நூறுக்கும் குறை யாது போல் இருக்கிறதே' அய்யர் : இருக்கும்' என்றார். ஜோஸியர் உங்களுடைய குணத்திற்கும் புத்திக் கும் ஐசுவரியத்திற்கும் வாய் திறந்து சொன்னால் - - .