10 கமலாம்பாள் சரித்திரம் போதாதா. லட்சம் ஜாதகம் வருமே. குழைந்தைக்குத் தான் என்ன! எல்லாரும் பெண் அவளும் பெண்ணா! அவள் புத்திக்கும் சாந்தத்துக்கும் அழகுக்கும் படிப் புக்கும் - என்றிப்படி ஸ்துத்தியம் பண்ண, அய்யர் (சகிக்கமாட்டாதவராய்,) 'குட்டிக்கு பத்து வயது ஆகிறது, இந்த வருஷத்திலாவது மேலைக் காவது கலியாணத்தை நடத்திவிடவேண்டும்.' ஜோஸியர் : 'இதுதான் சரியான வயது ; இதற்கு முன் என்ன கலியாணம்! அதெல்லாம் எனக்கே மன துக்கு சமாதானப்படுகிறதில்லை' (என்று சொல்லிக் கொண்டே) 'ஆஹா இது பேஷ் ஜாதகம் : பஞ்சமத்தில் சூரியன், ஜனனம் சனிதசை, அஷ்டாதிபதி குரு, சுக் கிர தசையில் நல்ல யோக மிருக்கிறது.' முத்துஸ்வாமி அய்யர் : 'பொருந்தின ஜாதகத்தை யெல்லாம் ஒரு பக்கமாக வையுங்கள் ; அப்புறம் அதிலே பொறுக்கிக்கொள்வோம். வாத்தியாரும் 'இதற்கு இரண்டு பாவமிருக்கிறது. இதுவும் பாவஜாதகந்தான்.' என்று ஒன்றொன்றாய்த் தள்ளி வைத்துக்கொண்டிருந்தார். இங்கே இப்படியிருக்க, மதுரையில் வெள்ளியம் பலத் தெருவில் ஒரு பெரிய காரை மச்சுவீட்டுத் திண் ணையில் இரண்டு கிழவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.. அவர்களுள் ஒருவர், 'முத்துஸ்வாமி பெண் ஜாதக மும் பயல் ஜாதகமும் பொருந்துகிறது. அதுதான் என் மனதுக்குப் பிடித்ததாயிருக்கிறது. நீங்கள் இன் னும் யோசனை செய்து கொண்டு சொல்லுங்கள்.' மற்றவர்: 'யோசனை என்ன? மனதுக்கும் பிடித்து ஜாதகமும் பொருந்தினால், அதைத்தான் பண்ணிவிடு