மனதுக்குப் பிடித்தது மணம் 11 வோம். முத்துஸ்வாமியும் மனிதர்கள் பேரில் அபிமா னம் விதரணை இதெல்லாமுடையவன். அவன் சம்சா ரம் அதைவிட. நான் போய்விட்டேனானால் 'மாமா, மாமா,' என்று செய்யும் ஆசார உபசாரம் சொல்லி முடியாது. ஊர்யோகக்ஷேமம் விசாரிக்கிறதும், எதி ராளி நோக்கத்தைக் கண்டு நடக்கிறதும் அவளிடத் தில் நிரம்ப நன்றாயிருக்கும். இரைந்த சொல் கிடை யாது. ஒருவர் பகை கிடையாது. சொத்தோ அள வில்லாமல் கிடக்கிறது. பெண் வெறுமனே தங்கத் திலே வார்த்தாற்போல் இருக்கும். மின்னல் கொடி தான். அவள் அழகு பயலுக்குக்கூட வராது'. மற்றவர் : 'போகட்டும் அதுதான் எனக்கும் மன திற்குப் பிடித்ததாய் இருக்கிறது. இராத்திரியும் புஷ். பம் வேணுமானால் வைத்துப்பார்ப்போம்' அதற்கு கிருஷ்ணய்யர் : 'புஷ்பம் வைத்துப் பார்ப் போம், சகுனத்தையும் பார்ப்போம். ஜாதகத்தையும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை பார்ப்போம். மன தில் சந்தேகமென்னத்திற்கு? நமக்கு என்ன, பெண் கிடையாதா? நாம் செய்வதை யெல்லாம் செய்துவிட் டால் அப்புறம் உள்ளபடியிருக்கிறது. இராத்திரி கோயிலுக்கு நானும் வருகிறேன், மீனாட்சி சம்மதத் தையும் கேட்போமே. இதிலென்ன' என்றார். ராம சுவாமி சாஸ்திரிகளும் 'ஆஹா, சரி, அப்படியே செய் வோம்' என்றார். கிருஷ்ணைய்யர் 'நான் சித்திரை வீதி வரையிலே போய்விட்டு அப்புறம் வருகிறேன்' என்று, விடைபெற்றுக் கீழே இறங்கிச்சென்றார்.