உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



3 | வம்பர் மஹா சபை. அன்று பகலில் கிருஷ்ணய்யரும் அவர் சம்பந்தி யாகிய ராமசுவாமி சாஸ்திரிகளும் பேசிக்கொண்ட படியே , இராத்திரி மீனாக்ஷி அம்மன் கோயிலுக்குச் சென்று புஷ்பம் வைத்துப்பார்க்க, வெள்ளைப் புஷ்பம் அகப்பட்டதுந்தவீர, அம்மன் சந்நிதியில் மூலக்கிரகத் தருகில் ஏற்றிவைத்திருந்த திருவிளக்கிலிருந்தும் பொ றிகள் கல கலவென்று புஷ்பங்கள் போல் உதிர்ந்தன. இதைக்கண்ட இருவரும் அடங்காத ஆனந்தத்துடன் வீட்டுக்கு வந்து, எப்பொழுது விடியுமென்று இர வெல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்து, விடிந்த வுடன் காலை அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு, சிறுகுளம் முத்துஸ்வாமி அய்யருக்குக் கடிதம் எழுது வதற்காக உட்கார்ந்தார்கள். அப்பொழுது, தபால்கா ரன் கிருஷ்ணய்யருடைய மேல் விலாசத்திற்கு ஒரு கடிதம் கொண்டுவந்தான். அது 'சிறு குளம்' என்று மேல் முத்திரையிடப்பட்டிருந்ததால், அதை ஆவலு டன் உடைத்து வாசித்துப் பார்க்க அதில் அடியில் வருமாறு வரையப்பட்டிருந்தது : சிறுகுளம், பங்குனிமீ 19s. ஸ்ரீமது ம-~-m - ஸ்ரீ மாமா அவர்களுடைய திவ்ய ஸ்ரீ - பாதபத்மங்களிலே பாலன் முத்துஸ்வாமி சாஷ்டாங்கபூர்வ மாக நமஸ்கரித்து விஞ்ஞாபனம். இவ்விடத்தில் அனைவரும் க்ஷேமம். அவ்விடத்திய க்ஷேமாதிசயங்களுக்கு அடிக்கடி - எழுதும்படி ஆஞ்ஞாபிக்கக் கோறுகிறேன. தங்களுடைய ஆசீர்வாத அனுக்கிரகம் ஸம்பூர்ணமா யுள்ள எனக்கு என்ன குறை? ஜலமிருக்கப் பயிர் வாடுவ தேன்? சி. ஸ்ரீநிவாசனுடைய ஜாதகமும் சௌ. லட்சுமி (கல்யாணியின் மறு பெயர்) ஜாதகமும் எல்லாவிதப் பொ