பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



லட்சுமி வேதாந்தம் பேசுகிறாள்! 193 கடவுளின் மகிமையே மகிமை, ஆஹா !' என்று வாய் விட்டுச் சொல்லமாட்டாமல் சொல்லி ஆனந்தித்தார் கள். அப்பொழுது லட்சுமி :-' என்ன கம்பீரம், என்ன விஸ்தீரணம்! அதில் எத்தனை கோடி ஜீவ ஜந்துக்களிருக்கின்றன? அதுவே தனியாக ஒரு உலகம் போலிருக்கிறது. அது ராத்திரிகூட தூங் காதோ?' என ஸ்ரீநிவாசன் :-' சுவாமிக்குத் தூக்கம் உண்டோ ! இதுவும் அவரைப் போலவே (மாயை யாகிய காற்றினால் அலைகளை) சிருஷ்டிப்பதும் அழிப் பதுமாயிருக்கிறது. நாம் கடைசியில் ஈசுவரனைப் போய்ச் சேருவதுபோல அலைகளும் சமுத்திரத்தில் கலக்கிறது' என்று அத்வைதம் பேசிப் பிறகு அவன் ' இன்னொரு ஆச்சரியம் பார். இந்த அலை கள் பிறப்பதும், குதிப்பதும், சிரிப்பதும், ஓடுவதும், ஒன்றை யொன்று அடிப்பதும், முட்டுவதும், மோது வதும், இறப்பதுமே தொழிலாயிருக்கின்றன. இவை களுடைய வீணாரவாரத்தினால் விளையும் கடைசி யோசையோ இவைகளுடைய சிரிப்பு விளையாட்டுக்கு முற்றும் விரோதமாய் " ஐயோ ஏன் இப்படி வீணாகக் கூப்பாடிட்டுக் கெட்டுப்போகிறீர்கள்! என்று சொல்லுவதுபோல் சோகத் தொனியை உடைத்தா யிருக்கிறது. இப்படித்தான் உலக வாழ்க்கையும்!' என்றான். லட்சுமி. - இப்படித்தான் மனிதனும் பிறந்து, சிரித்து, அழுது, சண்டைபோட்டு ஆடிப்பாடிக் கடைசியில் அமருகிறது. இங்கே ஒரு ஆள் இருந் தானே என்னடா மிச்சம் என்றால், ஒரு பிடி சாம்பல். அதையும் காற்று ஒரு மூச்சில் வாரிக்கொண்டு போய் விடுகிறது. ஏனடா இந்த விருதாச் சண்டை , இதில் உனக்கென்ன மிச்சம் மிஞ்சுவது, அவர் ஒருவர்தான்: போய் அவரைத் தேடு" என்றும், 13