194 . கமலாம்பாள் சரித்திரம் நீரில் குமிழி யிளமை நிறைசெல்வம் நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் - நீரில் எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே வழுத்தாத தெம்பிரான் மன்று என்றும் இந்த சமுத்திரம் நமக்குச் சொல்லுகிறாற் போலிருக்கிறது' என்று சொல்ல இருவரும் சிறிது நேரம் மௌனமாயிருந்தனர். ஸ்ரீநிவாசன், 'ஏது பெரிய வேதாந்தியாகப் போய் விட்டாயே' என்று அவளைத் தட்டிக்கொடுக்க, தன் னைத் தட்டிக் கொடுத்த கைக்கு அவள் ஒரு முத்தம் கொடுத்தாள். இப்படி விளையாடிக்கொண்டு இவர் கள் வீடுவந்து சேர்ந்தார்கள். இவர்கள் போய்ச் சேர்ந்த பின்னடியி லேயே தபால்காரன் முத்துஸ்வாமியய்யர் பெயருக்கு ஒரு அவசரத் தந்தி கொண்டுவந்தான். முத்து ஸ்வாமியய்யர் ' எங்கேயோ வெளியே போயிருந்தார். தந்தியோ ' அவசரத் தந்தி.' சிறுகுளத்திலிருந்து வந்திருக்கிறது. கமலாம்பாள் ' என்னமோ ஏதோ நீங்கள் உடைத்துப் பாருங்களேன்' என்று மாப்பிள் ளையைப் பார்த்துச் சொன்னாள். அதை உடைத்துப் பார்க்கிற வரைக்கும் ஒருவருக்கும் சமாதானம் இல்லை. ஸ்ரீநிவாசன் அது எப்பேர்ப்பட்ட தந்தியோ, நாம் உடைக்கலாமோ உடைக்கக் கூடாதோ என்று நெடு நேரம் ஆலோசனை செய்தான். அகத்துக்கு உள்ளே தந்தி வந்து விடுகிறது என்றால் அப்புறம் என்ன பண்ணுகிறது. ஸ்ரீநிவாசனே கடைசியாய் அதை உடைக்க எத்தனித்தான். தந்தியோது. கமலாம்பாளேன்' என்று
பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/206
Appearance