பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 துர்மரணமும் சகோதர சோகமும் வந்த தந்தியை உடைத்துப் பார்க்கும் வரை அவ எவர் பிராணன் அவரவரிடத்திலில்லை. அதை உடைத் துக் கொண்டிருக்கும்போதே முத்துஸ்வாமி அய்யர் வந்துவிட்டார். அந்தத் தந்தியில் ' தம்பி சுப்பிரமணி பய்யர் அபாயமாய் அசௌக்கியம், உடனே வரவும்' என்று எழுதியிருந்தது. அந்த சமாசாரம் இடிவிழுந் கால் எப்படியோ அப்படியிருந்தது. முத்துஸ்வாமி அய்யர் ' ஐயையோ இருக்கிறது அவன் ஒருத்தன், அவனும் போய்விடவேணுமா' என்றழுதார். அவ ருக்கு சுப்பிரமணியய்யர் ஒரே தம்பி. ஒருவர்மே லொருவர் நெடுநாள் நிரம்ப அன்பாக இருந்தார்கள். கடைசி காலத்தில் கலகக்காரி பொன்னம்மாள் மித் திரபேதம் செய்தாலும் சிறுகுளத்தை விட்டுப் பட் டணத்துக்காக ரயிலேறும்போதே அதெல்லாம் முத்து ஸ்வாமி அய்யருக்கு மறந்துபோய்விட்டது. ' அவன் என்ன செய்வான் பாவம்! அந்த ராட்சஸி கையிலகப் பட்டுப் பாம்பின் வாய்ப்பட்ட தவளைபோல் தவிக் கிறான். அவனைக் கோபிக்கிறதில் பயனென்ன' என் பது அவர் எண்ணம். தந்திவந்த அன்று சாயந்திரந் தான் முத்துஸ்வாமி அய்யர் தன் தம்பிக்காக ஒரு அழகிய விலையுயர்ந்த பனாரிஸ்பட்டும், சாரதா பட மொன்றும், இன்னும் சில சில்லரை சாமான்களும் வாங்கி வந்திருந்தார். தந்தி சமாசாரம் காதில் பட்ட வுடன் அவர் அவைகளை வீசி யெறிந்துவிட்டு, 'ஐயோ என்னை இப்படி யெல்லாம் சோதிக்க வேண்டுமா தெய்வமே' என்று அதிகமாய்த் துக்கித்தார். கம லாம்பாள் முதலானவர்கள் அவரை ' உடம்பு செளக் கியமில்லை யென்று தானே சொல்லி யிருக்கிறது ; அச்