உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'விதவை முட்டாக்கு வந்துவிட்டது.' 197 - - - விழுந்தது. மேலெல்லாம் செக்கில் வைத்துத் திரி பது போல் வலிக்கிறதே பாவி! சுந்தரத்துக்குக் கல் யாணம் பண்ண வேணும், குட்டிகளுக்கு சாந்தியாக வேணும்; ஐயோ பிராணன் போகிறதே, பேசமுடிய வில்லையே' என்று அழுது கொண்டு சொல்லிச் சற்று மௌனமாயிருந்து பிறகு பொன்னம்மாளுடைய இரண்டு கைகளையும் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு திடீரென்று எழுந்திருந்து பிணம் விரைத் தாற்போல் விரைத்து உட்கார்ந்தார். கண்களில் விழிபிதுங்கி நின்றன ; தலைமயிர் அவிழ்ந்து அலங் கோலமாய்க் கிடந்தது. பல்லை நறநற வென்று கடிக்கிறார், முகத்தைக் கோரமாய் வலிக்கிறார். பொன்னம்மாளைக் கொன்று போடுவார் போலப் பார்க்கிறார். பொழுதோ நடுநிசி. அவளோ தனியா யிருக்கிறாள். சுப்பிரமணியய்யர் இவ்விதம் திடீ ரென்று எழுந்து உட்கார்ந்து கொண்டு 'துரோகி கொலைக்காரி, சண்டாளி ' என்று பல்லைக் கடித்துக் கொண்டு உரக்கக் கதறித் தன் கையால் அவள் முகத் தில் வெகு பலமாய் இடித்தார். அவர் முகம் அந்த சமயத்தில் வெகு கோரமாயும், பயங்கரமாயுமிருந்தது பொன்னம்மாளுக்கு தேகம் முழுவதும் வெட வெட என்று நடுங்குகிறது. ஏதோ சொல்ல வாயெடுத்த சுப்பிரமணியய்யர் சொல்லமாட்டாமல் முகத்தை வலித்துக்கொண்டு படீரென்று கீழே விழுந்தார் பொன்னம்மாளோ பயத்தினால் சித்தம் ஸ்வாதீன மில்லாது கூக்குரலிட்டாள். தான் முன்னே மருந்து கொடுத்ததுதான் இவ்வளவுக்கும் காரணம் என்று தெரிந்தது. புருஷன் இனிப் பிழைக்கமாட்டா ரென்று அவள் நன்றாய் அறிந்தாள். விதவை முட் டாக்கு தன் தலையில் வந்து விட்டதாக அவளுக்குத் தோன்றியது. சுப்பிரமணியய்யர் எழுந்து உட்கார்ந்து அவள் முகத்திலிடித்தது அவள் மனதில் சாகும்வரை மறவாதபடி நிரம்ப ஆழமாய்ப் பதிந்தது. தான் தன்