198 கமலாம்பாள் சரித்திரம் புருஷனை வசியம் செய்ய வேண்டுமென்று கொடுத்த மருந்து தனக்கு வினையாய் வந்ததைக் குறித்து. வருந்துகிறாள். ஐயோ பாவம்! எத்தனை ஸ்திரீகள் தங்கள் புருஷரை வசியம் செய்ய வேண்டுமென்ற துராசையுடனே மருந்தைக் கொடுத்துக் கொன்றிருக் கிறார்கள். எத்தனை புருஷர்கள் இந்த விஷமருந் தினால் பயித்தியம் பிடித்தலைந்திருக்கிறார்கள். கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டாற்போல் தாங்கள் ஒன்று நினைத்து மருந்தைக் கொடுக்கிறது. அது ஒன்றைக் கொண்டுவந்து விடுகிறது. பின்வரும் கேட்டை நினை யாமல் புருஷனை மயக்க வேண்டுமென்று எத்தனிக் (கும் துஷ்டப் பெண்களின் கதி பொன்னம்மாள் கதி போலத்தான் ஆகுமென்பதற்குத் தடையேயில்லை. கீழே விழுந்த சுப்பிரமணியய்யர் அப்படியே அயர்ந்து. மூர்ச்சை போனார். பொன்னம்மாள் தனியே அழுது கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். இன்னபண்ணுவது என்று தெரியவில்லை. சித்தப்பிரமை கொண்டு மயங்குகிறாள். சுப்பிரமணியய்யர் எழுந்து உட் கார்ந்து முகத்தில் இடித்தது அவள் ஞாபகத்தை விட்டுப் போகாமல் அவள் நித்திரை செய்வதையும் தடுத்தது. விடிய நாலு நாழிகைக்கு சுப்பிரமணியய் யர் விழித்துக்கொண்டு பொன்னம்மாளைப் பார்த்து ' உன்னை நான் ஸ்திரீயென்று நினைத்திருந்தேன் ; நீ எனக்கு எமனாக முடிந்தாயடி ! எமனாக முடிந்தாய், நீ எனக்குக் கொடுத்த சுகத்துக்கு இப்பொழுது வட்டியும் முதலுமாய் என் உயிரையே பறித்துக் கொண்டு விட்டாய். (பல்லைக் கடித்துக்கொண்டு) அந்தப் பாவத்தில் நீ போ. இந்த ஜன்மத்தோடு நம்மிருவருக்கும் தீர்ந்தது. என்னண்ணாவுக்கும் எனக் கும் ஆகவிடாமல் அடித்தாயே. ஐயோ அவனைப் பார்க்கவேணுமே, அண்ணாவைப் பார்க்க வேணுமே, என்னண்ணாவைப் பார்க்க வேணுமே! அவனுக்குத் தந்தியாவது கொடுத்து வரவழைக்க வேணுமே,