உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



' அண்ணா உன்னைவிட்டு நான் போகிறேனே.' 201 முகத்தை ஏறிட்டுப்பார்த்துக் கொண்டு), ஐயோ அந் தப் பாவி முண்டை சொல்லைக் கேட்டு உன்னோடே பகைத்துக் கொண்டேனே ; அதெல்லாம் மறந்துவிடு அண்ணா ; நாம் முன்னே இருந்ததை நினைத்துக்கொள் அண்ணா; அண்ணா, உன்னை விட்டு நான் போகிறேனே, - ஐயையோ!' என்று அவரைக் கட்டிக்கொண்டு கோ' என்று அழுகிறார். முத்துஸ்வாமி அய்யர் அதைவிட அழுகிறார். சுற்றி யிருந்தவர்கள் எல் லாரும் அழுகிறார்கள். ஒருவருக்காவது சஹிக்கக் கூடவில்லை. மறுபடியும் சுப்பிரமணியய்யர் முத்து ஸ்வாமியய்யரைப் பார்த்து 'ஐயோ அண்ணா, எனக்கு அப்பா, அம்மா, அண்ணா எல்லாம் நீ தானே, உன்னை விட்டுப் போகிறேனே. என்னமாகப் போவேன் அண்ணா; சஹிக்கமாட்டாயே அண்ணா. ஒரு தம்பி, நானும் போய்விட்டால் அம்பி அம்பி என்று அலறு வாயே அண்ணா, அழாதே அண்ணா' என்று சொல்லி கோ' என்று அழுகிறார். முத்துஸ்வாமியய்யர் "ஐயையோ என் சுப்பிரமணியமே, உன்னை நான் இப்படியா பார்க்கவேணும். இதற்காகவா வந்தேன்! அப்பா தெய்வமே உனக்கிது தர்மமா! ஐயோ!' என்று வாய்விட்டுக் கதறுகிறார். இப்படி ஒருவரை யொருவர் கட்டிக்கொண்டு அழ, கமலாம்பாள், லட்சுமி, ஸ்ரீநிவாசன் இன்னும் அங்கிருந்தவர்கள் எல் லோரும் மூலைக்கொருவராய் நின்று அழுகிறார்கள். பொன்னம்மாள் மாத்திரம் அழவில்லை, அவளுக்கு சித்தஸ்வாதீனமில்லைபோல் காணப்பட்டாள் ; எங் கேயோ வெட்டவெளியைப் பார்க்கிறாள் ; ' என்ன விழிவிழிக்கிறதடி, கண்ணைப்பார் பயமாயிருக்கிறது, அடிக்க வருகிறதடி' என்றிப்படித் தனக்குள்ளே சொல்லிக்கொள்ளுகிறாள். யாராவது போய் ' பொன் னம்மாள், பாவி, இப்படி வந்து விட்டதேயடி! என் றால், சற்றுநேரம் அவர்கள் சொல்வது அவள் காதில் படுகிறதில்லை, பிறகு ' என்ன சொன்னாய், என்னவோ