பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



204 கமலாம்பாள் சரித்திரம் விடத்து அது மனிதனாலாவது, விதியினாலாவது வேட்டையாடப்படாது போவது இல்லை. சுப்பிரமணியய்யருக்கும் முத்துஸ்வாமியய்யருக் கும் இருந்த சகோதர வாஞ்சையானது நெடுநாள் யாதொரு குறைவுமின்றி நீடித்திருக்க கடவுளுக்கு சம்மதமில்லாமற் போயிற்று. முன்பேயே விரக்தி யடைந்திருந்த முத்துஸ்வாமியய்யருக்கு மனித ருடைய கொடுமையைக் காட்டிலும் மனிதர்கள் நல்லவர்கள் தான் என்று அவர் சிற்சில சமயங்களில் தனக்குள்ளேயே சொல்லிக்கொள்வார். ஆயினும் இவ்வித துன்பங்கள் ஒருமித்து வருவது அவருக்கு இவ்வுலக இன்பத்தில் ஆசையை ஒருமிக்கவேண்டு மென்று கடவுள் அனுக்கிரஹம் போலவும் சிற்சில சமயங்களில் தோன்றும். ' நமக்குப் பிள்ளையேது, குட்டியேது, தம்பியேது ; மனைவியேது ; ஏதோ கட லில் காற்றினால் துரத்தப்பட்ட இரண்டு நாணல்கள் சிலகாலம் ஒன்றையொன்று சேர்ந்திருந்தால் எப் படியோ அப்படித்தான் உலகத்தில் பந்துக்களும் மித் தரர்களும். எல்லாம் இந்திரஜாலம், மாயை, அக்ஞா னம்' என்று அவர் தன்னையே அடிக்கடி கண்டித்துக் கொள்ளுவார். ' அன்னை யெத்தனை யெத்தனை அன் னையோ, அப்ப னெத்தனை யெத்தனை யப்பனோ, பெண்டி ரெத்தனை யெத்தனை பெண்டிரோ , பிள்ளை யெத்தனை யெத்தனை பிள்ளையோ ' என்று அவர் தன் மனதுக்குள்ளேயே அடிக்கடி பாடிக்கொள்வார். ஆனால் உலக வியவகாரங்கள் அவரை முற்றும் விட்ட பாடில்லை. சுப்பிரமணியய்யர் சாகும் காலத்தில் தன் குழந்தைகளைத் தமையனிடம் ஒப்புவித்துப் போனாரல் லவா? முத்துஸ்வாமியய்யர் தன் தம்பியின் இச்சைக்கு ஏற்ப 'சுந்தரம், சுந்தரம்' என்று முன்னிலும் பதின் மடங்கு வாஞ்சையுடன் சுந்தரத்தை படிப்பு முதலிய விஷயங்களைப்பற்றி அடிக்கடி விசாரிக்கிறது ; தம்பி