23 திரவிய நஷ்டமும் பிரிவும் இவ்விதம் முடிந்தது சுப்பிரமணியய்யருடைய சரித்திரம். அவர் ஏன் இவ்விதம் இறந்திருக்க வேண்டும் என்று சிலர் கேட்கலாம். சரித்திரத்தை நாம் நடந்தபடி எழுதவேண்டுமேயல்லாது மாற்று வதற்கு நமக்கு என்ன அதிகாரமிருக்கிறது? நம் முடைய திருப்திக்காக இவ்வுலகம் சிருஷ்டிக்கப்பட் டிருப்பது போல் காணவில்லை. உலகம் நமது ஆக் ஞைக்குள் அடங்குமாயின், வாலிபர்கள் இறப்பதேன், விதவைகள் பெருப்பதேன் ; வீடுகளெங்கும் வியாதி கள் புகுந்து 'பூவுதிரப் பிஞ்சுதிரக் காயுதிரக் கனி யுதிர' என்றபடி ஈவு இரக்கமில்லாது எங்கும் நிறைந்த பொருளாய் எமன் உலாவுவதேன்? பச் சைப் பாம்புகள் இலைகளோடி.லைகளாய்க் கிடந்து வேற்றுமைப்படாது வாழும் ஓர் அடர்ந்த விருட்சம் போல பாப் புண்ணியங்கள் பேதாபேதமின்றி பின்னிக் கிடக்குமிப் பாழுலகின் இன்பாதிகளை அற்பமெனக் கருதாது அவற்றில் ஆசைவைத்து ஓர் நாசகாலியின் பாட்டைக் கேட்டுப் பன்றியாய் மாறிய மானிடர்கள் போல் உணர்ச்சி, உணவு, உற்பத்தியாதிகளில் அவ் வுருவே அடைந்த அறிவீனர்களாகிய நாம் நமக்குள தோர் அரைக்கணத்துள் பண்ணும் பாபங்கள் எத் தனை? எண்ணும் எண்ணங்கள் எத்தனை? சொல்லும் துற்சொற்கள் தான் எத்தனை? இவ்விதம் செய்யத் தகாதன யாவும் செய்து கூட்டிய குற்றக்குவியலை அனுபவிக்கப் புகுந்ததோர் சிறைச்சாலையாகிய இவ் வுலகின் கண்ணும் சிற்சில சமயங்களில் யதார்த்தமான அன்பானது தன்னினத்தை விட்டு வழிதப்பி வந்த மான் பேட்டைப் போல வந்துவிடுகிறது. அவ்வாறு வந்த