இடிமேல் இடி விழுந்தது 207 லாம்' என்று தன் மனதுக்குள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். இப்படியிருக்கையில் ஒருநாள் பம்பாயிலிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அவர் பட்டணம் போயிருந்த பொழுது ஓர் பெரிய வியாபாரத்தில் இறங்கினார். அது ஆதியில் அதிக லாபம் காட்டின படியால் தன் நிலங்களை யெல்லாம் விற்று அந்த வியா பாரத்திலேயே தன் சொத்து முழுவதையும் போட் டிருந்தார். அந்த வியாபாரத்துக்கு மூலஸ்தானம் பம்பாய். அன்று வந்த கடிதத்தில் அந்த வியாபாரம் rணித்துப்போய்விட்டதென்றும், அவர் நம்பியிருந்த வியாபாரச் சங்கத்திற்கு அபாயம் வரும் போலிருந்த தென்றும் அவர் உடனே புறப்பட்டு வரவேண்டு மென்றும் கண்டிருந்தது. அந்தக் கடிதத்தைப் படித் துப் பார்த்தவுடன் அவர் ' வருவதெல்லாம் வரட்டும், காம் பண்ணுகிற அக்கிரமத்துக்கு அவ்வளவும் வேண் டியதுதான். அவ்வளவு பணமும் போச்சா! நல்லது, நல்லது; போகிறதெல்லாம் போகட்டும்' என்று தனக்குள் சொல்லிக்கொண்டு கமலாம்பாளைப் பார்த்து ' அடியே இனிமேல் எங்கேயாவது அவலிடித்தாவது, தட்டுவாணித்தனம் பண்ணியாவது பிழைத்துக்கொள். நான் போகிறேன்' என, கமலாம்பாள் திடுக்கிட்டு திக்பிரமை கொண்டு நிற்க 'உனக்கும் நமக்கும் விட் உது' என்று கடிதத்தை வீசியெறிந்து வேஷ்டி முதலியவற்றை யெடுத்து ஜாக்கிரதையாகக் கட்டத் துவக்கினார். கமலாம்பாள் அந்தக் கடிதத்தை யெடுத் துப் பார்த்துவிட்டு அவருடைய கையைப்பிடித்துக் கொண்டு அழுதாள். அவர் அவளை உதறியெறிந்து விட்டு 'பணம் போய்விட்டதென்று அழுகிறாயல் லவா? அழு! இனிமேல் உனக்கும் எனக்கும் என்ன? நான் ஏழை! நீ எங்கே வேணுமோ போகலாம். நெய்க்குடத் தெறும்புகள். பணமிருந்தால் பெண்