உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



208 கமலாம்பாள் சரித்திரம் டாட்டி பிள்ளை யெல்லாம் உண்டு. 'இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்த தாயும் வேண் டாள்' என; அவள் அவர் காலைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு கண்களில் பிரளயமாய் நீர் பெருக 'ஐயோ நான் என்ன தப்பிதம் செய்தேன். உங்களை விட்டால் எனக்கு என்ன கதியிருக்கிறது! எனக்குப் பிதாவும் நீங்கள் பார்த்தாவும் நீங்கள் ; அண்ணன் தம்பி எல்லாம் நீங்கள் ; எனக்கு தெய்வமும் நீங்கள். ஐயோ நான் என்ன தப்பிதம் செய்தேன் ; என்னை என்ன தண்டனை பண்ண உங்களுக்கு சுதந்திரம் இல்லை! கத்தியெடுத்து என் கழுத்தை யறுங்களேன் ; அப்பொழுதும் உங்கள் கையாலிறப்பதே மோட்சம் என்று நான் பிராணனைச் சந்தோஷமாய் விட மாட் டேனோ! நீங்கள் ஒரு நாளும் என்மேல் இப்படி யிருந்ததில்லையே. குழந்தை போனது போனதாக எனக்குத் தோன்றவில்லையே. உங்கள் முகமலர்ச்சியிலே நான் அதையும் மறந்து இருக்கிறேன். என்னை நீங் களும் உதறி யெறிந்துவிட்டால் அப்புறம் நான் என்ன செய்வேன்? சொத்து அவ்வளவும் போனாலும் போகிறது. நமக்கு என்ன , பிள்ளையா, குட்டியா : சொத்து என்னத்துக்கு. நான் குடம் சுமந்து, அவல் இடித்து சம்பாதித்துப் போடுகிறேன். உங்களுடைய தற்கால சௌக்கியத்துக்கு எப்பொழுதும் குறைவு வராமல் நான் பார்த்துக்கொள்ளுகிறேன். எனக்கு என்னத்துக்குக் காசும் பணமும்? உங்கள் அன்பு ஒன்று போதாதா? அதைவிட எனக்கு என்ன. சொத்து பெரிது! ஐயோ! என்னை இப்படி உதறி யெறிவது உங்களுக்கு தருமமா. நான் ஏழை, பஞ்சை, அநாதை; உங்களை அண்டினேன் ; காப்பாற்றவேணும்' என்று அவர் காலைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு தன் கண்ணீரால் ஸ்நானம் செய்விக்க, அவர் ' இதென்ன கால்கட்டா யிருக்கிறது சனியன்' என்று சொல்லி அவளைக் கையால் தூக்கி ' என்னடி செய்ய