' நீங்கள் இங்கேதானே இருங்கள்' 209 வேணுமென்கிறாய்?' என்று அதட்ட, அந்த உத்தமி அவர் மார்பில் தானே சாய்ந்து கொண்டு தாரை தாரை யாய் அழ, அவரும் உருகி அவளைக் கட்டிக்கொண்டு தானும் அழ ஆரம்பித்தார். பிறகு இருவரும் ஒரு வரை யொருவர் தேற்றிக்கொண்டார்கள். வாடி யிருந்த கமலாம்பாள் உடம்பு அன்று சந்தோஷத்தால் பூரித்தது. அழுகையெல்லாம் ஓய்ந்த பிறகு கமலாம் பாள் சொத்துப்போனால் சனியன் தொலைந்தது! நீங் கள் இங்கேதானே இருங்கள் நான் உழைத்துப்போடு கிறேன் ; இல்லாவிட்டால் - இரண்டுபேருமாய்ச் சேர்ந்து எங்கேயாவது போய்ப்பிழைக்க வழி தேடு வோம்' என முத்துஸ்வாமியய்யர், ' சொத்து போன தாக இல்லை, நான் போய் போட்ட முதலையாவது பற்றிக்கொண்டு வருகிறேன். நமக்குப் பணம் வேண்டாமென்றாலும் லட்சக்கணக்காகப் பணம் பறி கொடுக்க மனது வரவில்லையே. நான் போய் எது சாத்தியமோ அதைச் செய்து வருகிறேன். அது வரையில் நீ இங்கேதானே பல்லைக்கடித்துக்கொண் டிரு; நான் போய்க் கூடிய சீக்கிரத்தில் ஓடிவந்து விடுகிறேன்' என்றார். கமலாம்பாள் அவரைவிட்டுப் பிரிந்திருக்கமாட்டேனென்று மன்றாடியும் அவளைக் கூட்டிப்போவது அசௌகரியமாக இருந்தபடியால், அவள் ஊரிலேயே இருக்கவேண்டியிருந்தது. முத்து ஸ்வாமியய்யர் மட்டும் பம்பாய்க்குப் புறப்பட்டார். அடிக்கடி கடிதம் எழுதுவதாக உறுதி சொல்லிச் சென்றார். பம்பாயிலிருந்து வந்த சமாசாரம் ஒரு வருக்கும் தெரியக்கூடாதென்று கண்டிப்பாய் உத்தர வும் செய்துவிட்டுப் போனார்.