24 தாடகை, சூர்ப்பநகை, ஆஷாடபூதி, திரிவிதம் துஷ்டலட்சணம். அவர்போய்ச் சிலநாளைக்குப் பிறகு வம்பர் மகா ஜன சபை அக்கிராசனாதிபதியாகிய மகாகனம் பொருந் திய சுப்பம்மாளும், பொன்னம்மாளும், பொன்னம் மாள் தாயார் சங்கரியம்மாளுமாக சுப்பிரமணியய்ய ரஹத்துக் கூடத்தில் ஏதோ ரஹசியம் பேசிக்கொண் டிருந்தார்கள். சுப்பம்மாள் :- யாயா சொல்யேனே அவயா அப்டீனு சொன்னாய். சங்கரி :- சொல்லுகிறதைத் திருத்தமாய்ச் சொல்லு. நீ பேசுகிறது எனக்குப் புரியவில்லையம்மா ; ஏது இப்படிச் சொல்லுகிறாள் என்று கோபித்துக் கோள்ளாதேயம்மா. சுப்பம்மாள் :- கோபம் என்ன ; தியுத்தமாயித் தான் சொல்யேன் ; யாயா அவயா சொல்யா என்யா' என்றிப்படி முன்னிலும் அதிக திருத்தமாய் ஆரம்பித் தாள். பிறகு சங்கரி இவளுடைய பாஷையின் சூக்ஷ்மத் தைக் கிரஹித்துக்கொண்டாள். அரிச்சுவடியில் யகரம் இவளுக்கு பெண் வயிற்றுப் பேத்தி என்றும், ரகரத் துக்கும் இவளுக்கும் சக்களத்திச் சண்டையென்றும் அவள் அறிந்து கொண்டாள். சுப்பம்மாள் இப்படி யரயோர பேத, ' என்ற சூத்திரவிதிப்படி இலக்கண மாய்ச் சொல்லி முடித்தது என்னவென்றால், பொன் னம்மாள் மருந்துவைத்துத் தன் புருஷனைக்கொன்று விட்டாளென்று கமலாம்பாள் தன்னிடம் சொன்னா ளாம். பொன்னம்மாளுடைய மருந்து தான் சுப்பிர