பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



214 கமலாம்பாள் சரித்திரம் இப்பொழுது என்னத்துக்கு ; பம்பாயிலெல்லாம் வெகுபேர் தனிகர்களிருக்கிறார்களாமே' என்றார் முத்.-அது கிடக்கட்டும், நீங்கள் சொன்னது என்ன சொல்லுங்கள். தீட். - அது ஒன்றுமில்லை என்கிறேன். காசிக்கும் பம்பாய்க்கும் 30, 40-மைலிருக்குமா? நிரம்ப சமீப மென்று சொல்லுகிறார்களே. முத். - நான் என்ன கேட்கிறேன் நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? 'தில்லைக்கு வழியெது என்றால் சிவப்புகாளை முப்பது பணம்' என்று பதில் சொன்ன கதையாயிருக்கிறதே! அதைத் தயவு பண்ணி என்ன என்று சொல்லுங்கள். தீட் - நல்ல சங்கதியாயிருந்தால் அப்பொழுதே சொல்லியிருக்க மாட்டனோ? என்னவோ கழுதை பெண்டுகளுடைய சுபாவமிப்படித்தான்' - சொல்லு கிறார் கீதையிலே - - முத்- அது கிடக்கட்டும். பெண்டுகளா! யார்? என்ன சமாசாரம்? தீட். - தன்னாலே நாளை ஊருக்குப் போகிறாய், தெரிகிறது. அதற்கென்ன இப்பொழுது அவசரம் ; ஒன்றும் இல்லை. விசனப்படாதே ; பகவான் ஒருத்தர் இருக்கிறார். அவர் சூத்திரதாரி, நாம் சூத்திரப்பா வைகள். அவர் ஆட்டி வைக்கிறார். நாம் ஆடுகிறோம். புருஷ சூக்தத்திலே சொன்னார். - முத்.- அது இருக்கட்டும், சங்கதியைச் சொல் லுங்கள். அது என்ன கெட்ட சங்கதியாயிருந்தாலும் சரி, சொல்லிவிடுங்கள். நடந்தது நடந்துபோய்விட்டது. இனிமேல் நீங்கள் சொல்லுவதில் என்ன குற்றம்? வெறுமனே சொல்லுங்கள்.