பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஆஷாடபூதி ஆடம்பர விபூதி 215 தீட். - ஸ்திரீகளே மாயாரூபிணிகள். அவர்களை ஒன்றும் நம்பக்கூடவில்லை. கலி புருஷன் லோகத் திலே வந்து நர்த்தனம் பண்ணுகிறான், பேதி வைசூரி வந்து நர்த்தனம் பண்ணுகிறாற்போல. அதிலே வர்ஜா வர்ஜம் இல்லை, பிதா இல்லை, பர்த்தா இல்லை , சகோ தரன் இல்லை, பந்து இல்லை, போய்விட்டதுகாலம். இந்தக் காலத்துக்குச் சிதம்பரம் நல்ல திவ்ய மான க்ஷேத்திரம். அதுவும் இன்றைக்கு உண்டே யல்லவா -. முத்.- உங்களுக்கு இது நன்றாயிருக்கிறதா? முப் பது தடவை கேட்டாய்விட்டது. சுற்றிச் சுழட்டுகிறீர் களே யொழிய காரியத்தைச் சொல்லமாட்டேன் என் கிறீர்களே. சீக்கிரம் சொல்லுங்கள். தீட். - நான் சொல்லத்தான். வேணுமா? தொந் தரவு பண்ணுகிறாயே, அப்படி யொன்றும் அதிசயம் இல்லை. லோகத்திலே நடக்காதது இல்லை. இருந் தாலும் இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா என்றார்போல கமலாம்பாள் கூட இப்படிப் பண்ணு வாளா என்பதுதான் ஆச்சரியம். ஏதோ காலவிசே ஷம், பூர்வஜன்ம கர்மவாசனை. விட்டுத்தள்ளு கழு தையை ; போனாற் போகிறது. முத். - யார்? என் சம்சாரமா ! என்ன சங்கதி, என்ன அது! (பதறி) செவ்வையாகச் சொல்லுங்கள்! தீட். - என்னத்தைச் சொல்லுகிறது, என்னவோ யாரோடேயோ என்னமோவாம். கண்டுவிட்டார்கள். ஊரில் கூக்குரலாய் விட்டதாம் ; என்னவோ உனக் குத் தெரிந்திருக்கு மென்றல்லவோ இந்தப் பிரஸ்தா பத்தை யெடுத்தேன். கிடக்கிறது கழுதை ! இதற் காக ஒன்றும் விசனப்படாதே. பகவான்கூட சொல்லு கிறார், இந்திரியஸ்யேந்திரஸ்ய சர்வகர்மாணி