ஜோதி தரிசனம் 229 ஆறெலாங் கங்கையாய வாழிதாம் கூறுபாற் கடலையே யொத்த குன்றெலாம் ஈறிலான் கைலையே யியைந்த. - எந்தச் சிறு நதியும் கங்கா நதியினுடைய கௌர வத்தையடைந்து பகவான் நாம பஜனையைச் செய்து கொண்டு சென்றது. சமுத்திரமோ தனது சோகத் தொனியை மறந்து சாக்ஷாத் பகவானுடைய சயன ஸ்தானமாகிய க்ஷராப்தியைப்போல விளங்கி, அந்தப் பகவானுடைய குணங்களை விஸ்தரிக்க கம்பீரமான தனது குரல்கூடக் காணாது 'அன்பெனும் நறவ மாந்தி,' ' முங்கையான் பேசலுற்றான்' என்றபடி கட் குடித்த ஊமை பேசத் தொடங்கினாற் போலக் கை களையெல்லாம் நீட்டிச் சொல்ல மாட்டாமற் சொல்லி ஆனந்தித்தது. மலைகளெல்லாம் சாக்ஷாத் கைலாச பர்வ தத்தைப் போல காம்பீரியத்தை யடைந்து கடவுளி னுடைய ஆலையங்கள் போல நின்றன. மரங்களெல் லாம் நூதனமான பசிய இலைகளை ஆடையாக உடுத் துத்தேன் தெளித்துத் தாதுதூவி வசந்தமாடின. புஷ்ப கங்ளோ பகவத்தாராதன மகோற்சவத்தைப் பரிம் ளிக்க, அரம்பையர் விசும்பினாடு மாடலினாடின. பட்சி களெல்லாம் உலகையிகழ்ந்து உயரப்பறந்து விஞ்சை யர் குழாமென விசும்பிடை நின்று கடவுளையே நோக்கிக் கானம் செய்தன. காற்று கந்தப்பொடி களைத் தூவி கானத்தால் உலகை நிரப்பி எங்கும் பரவி எல்லோரையும் திருப்தி செய்து பகவதாராதன மங் கள காரியாதிபனாய் விளங்கிற்று. மிருகங்கள் தத்தம் வைஷம்யங்களை மறந்து வாலையுயர்த்தி நாலுகாலா லும் துள்ளித் துள்ளி ஓடின. கேவலம் மனிதனும் கூட தரையையே மோந்து, தரையையே பார்க்கும் பன்றிப் பார்வையைவிட்டு மேனோக்கி மதிமயங்கி அன்பெனுமாறு கரையது புரள நன்புலனொன்றி நாதவென் றரற்றி