பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



230 கமலாம்பாள் சரித்திரம் உறைதடுமாறி உரோமஞ்சிலிர்ப்ப கரமலர்மொட்டித் திருதயமலர கண்களி கூர நுண்டுளியரும்ப, இடரைக்களையு மெந்தாய்போற்றி ஈசாபோற்றி யிறைவாபோற்றி அரசேபோற்றி அமுதேபோற்றி முத்தாபோற்றி முதல்வா போற்றி அருமையிலெளிய அழகே போற்றி கருமுகிலாகிய கண்ணே போற்றி என்று போற்றிப் போற்றித் துதித்துக் கொண்டா டினான். பூலோகத்துப் பூஜாரீதியிப்படியிருக்க ஆகாயத் திலோ ஆதித்தர், வசுக்கள், மருத்துவர், திக்குப்பால கர் முதலிய தேவர்களும் அகஸ்தியர், ததிசி, பிருகு, மார்க்கண்டர், வசிஷ்டர், பாரத்துவாசர் முதலிய முனி வர்களும், யட்சகர், கந்தருவர், இயக்கர், வித்தியா தரர், கின்னரர், கிம்புருடர் முதலிய கணங்களும் மின் னற்கொடி போலவும், இந்திர தனுசைப்போலவும், பளீர் பளீர் என்று மின்னிக்கொண்டு கூட்டம் கூட்ட மாக நிற்க, தும்புருநாரதாதிகள் சுரபத், வீணை, தம் பூரு முதலிய வாத்தியங்களைக் கொண்டு ஓம் ஓம் என்ற ஓங்கார சுருதியையே சுருதியாகக்கொண்டு தேவகானம் செய்ய, சூரிய, சந்திர, நட்சத்திரங்களா கிய அகிலாண்ட கோடிகளும் தத்தம் பெரிய ரூபங் களுடன் ஒழுங்காய் ஒன்றை யொன்று அனுசரித்துக் கண்ணெட்டிய தூரமட்டும் வச்சிரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், பச்சை , கோமேதகம், நீலம், பவளம் முதலிய பற்பல வருணங்களாய்ப் பிரகாசித் துப் பகவானை நோக்கி அமிர்தமயமான கானத்தைச் செய்து ஓர் பயங்கரமான அழகுடன் வெகு கம்பீர மாய் உருள, இவை யெல்லாவற்றிற்கும் மேல் சகல லோகத்துக்கும் காரணனாய், சகல லோகத்துக்கும் நாய கனாய், சர்வலோக சரண்யனாய், நித்தியனாய், நிர்மல