பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



232 ) கமலாம்பாள் சரித்திரம் தங்களுடைய தரிசன விசேஷத்தினாலே தேவர், முனி வர் காணாததைக் கண்டேன், கண்டேன்! என்னு டைய இந்த ஏழைக் கண்களால் கண்டேன். வேத வேதியர் விரிஞ்சன் முதலோர் தெரிகிலா ஆதிதே வனை நான் அறிந்தேன். தங்களைத் தரிசித்த பலனைக் கண்டேன். என்னை துர்மரணத்திலிருந்து ரட்சித்த தாங்கள் தான் அக்ஞானத்திலிருந்து ரட்சிக்கவேண் டும், சரணம், சரணம், சரணம்' என்று மறுபடி அவர் பாதத்தில் நமஸ்கரிக்க, அவர் அவரை எழுப்பி அருகே உட்காரவைத்து 'இதென்ன மயக்கம், சற்றுமுன் நீதானே "சுவாமியேது, பூதமேது என்று சொன்னாய்' என, முத்துஸ்வாமியய்யர் ' நான் பண்ணிய பெரிய அபசாரத்தை மன்னிக்க வேணும். நான் பண்ணினது பாவம்; தெரியாமல் செய்து விட்டேன். நான் என்ன தவறுதல் செய்தாலும் கடவுள் கிருபை எனக்கு இல்லாமற் போகவில்லை. தங்களைத் தரிசித்த எனக்கு பெண்டாட்டி, பிள்ளை, தம்பி எல்லாரையும் பறி கொடுத்தென்ன நஷ்டம். என்னுடைய பிறவிப் பாசத்தை ஒழிக்கவேண்டு மென்றே கடவுள் எனக்கு விசேஷமாக அனுக்கிரஹம் செய்திருக்கிறார். உல கத்தில் விரக்தியை உண்டு பண்ணினதுமல்லாமல் தங் களையும் எனக்கு குருமூர்த்தியாய் அனுப்பியிருக்கிறார். தாங்கள் தான் காப்பாற்றவேணும்' என்று சொல்லிப் பிரார்த்திக்க, சுவாமிகள் 'பயப்படாதே, நல்ல நல்ல பூஜையைப் பண்ணியிருக்கிறாய், பகவான் உன்னிடத் தில் விசேஷக் கிருபை வைப்பார். நீ இன்னும் பக வான் விஷயத்தில் சொஞ்சம் பக்கியோடு கூட மட்டும் இருப்பாயாகில் உனக்கு இன்று கிடைத்த ஆனந்த சேவை எக்காலத்தும் கிடைக்கும். நீ இப்பொழுது பகிரங்க பூதமாய்ப் பார்த்த காட்சியை உனக்குள் ளேயே இடைவிடாது நீ தரிசித்து அனுபவிக்கலாம். உன்னை அழைத்துப் போகவே என்னைக் கடவுள் இங்கு அனுப்பியது போலிருக்கிறது. நமக்கு இனி