பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'நான் கண்ட காட்சி அற்புதம் ' 233 மேல் இங்கே காரியம் இல்லை, போவோம் வா' என்று ஆக்ஞாபித்து எழுந்து மண்டபத்தை விட்டு வெளி யேறி முன்னே செல்ல, முத்துஸ்வாமியய்யர் ' இது வும் ஒரு ஆச்சரியந்தான், நாம் ஒன்று நினைக்க தெய் வம் ஒன்று முடிக்கிறது. நமக்கு இனி எங்கே போனா லென்ன,- கமலாம்பாள், ஐயோ இப்படியா மோசம் செய்தாய்? சிறு குளம் நாம் பிறந்ததும், வளர்ந்ததும், - போகட்டும் என்னைப்போல பாக்கியசாலிகள் உல கத்தில் கிடையாது. அடிமுண்டை , நானோ ஆசிரமம் வாங்கிக் கொள்ளப்போகிறேன் என்று தெரியுமே. அதற்குள்ளேயா அவசரம் - சீ! இந்த இழவு ஞாபகங் கள் இப்பொழுது ஏன் வருகிறது. ஐயோ, நான் இன்று கண்ட காட்சி அடாடா! என்ன அற்புதம்! என்ன அற்புதம்! ஐயோ அதல்லவோ சுகம். பேரின் பம் என்று நன்றாய்ப் பெயரிட்டார்கள். அந்த பாக் கியத்தை நாம் நித்தியமாய் அனுபவிப்போமானால் - அந்தமுடனாகி யளவாமல் என்னறிவில் சுந்திரவான் சோதி துலங்குமோ பைங்கிளியே! 'கண்ணுள் மணிபோல் இன்பம் காட்டி யெனைப்பிரிந்த திண்ணியவரும் இன்னும் வந்து சேர்வரோ பைங்கிளியே, என்று குதூகலத்துடன் மனதுக்குள் பாடிக்கொண்டு பின் செல்ல, இராப்பொழுதென்ற பயம் சற்று மில்லாமல் இருவரும் காட்டு மார்க்கமாய்ப் பிர --யாணம் செய்தார்கள்.