சதிகாரர்கள் சிக்கினர் 243 வில்லை ' என்று இப்படிப் பிதற்றிக்கொண்டு போக இந்தப் பிதற்றுதலிலிருந்து வைத்தியநாதய்யர் சம் யோசிதமான கேள்விகளைக் கேட்டு அவளுடைய மன தைத் தன் வழி திருப்பி, வேண்டிய சங்கதிகளைக் கிரகித்துக்கொண்டு விட்டார். சங்கரியம்மாள், ஈசுவர தீட்சிதர், சுப்பம்மாள் ஆகிய மூன்று பேரும் கூடிப் பேசிக் கமலாம்பாளைப்பற்றி முத்துஸ்வாமியய்யரிடத் தில் அபவாதம் பேசி அவர் ஊருக்கு வராதபடி செய்து விட்டார்களென்று அவருக்குத் தெரிந்தது. இதற்குள்ளாக சங்கரியம்மாளும் சுப்புவும் பொன்னம் மாளைக் காணாமல் தெருவெல்லாம் வீட்டுக்கு வீடு கூக்குரலிட்டுத் தேடிக்கொண்டு கடைசியாய் வைத் தியநாதய்யருடைய வீட்டுக்கு வந்தார்கள். உடனே வைத்தியநாதய்யர் அவர்களை அப்படியே நிற்கும்படி கட்டளையிட்டு அவர்களை வெளியில் விடாதபடி போலீஸ்காரருக்கு உத்தரவு கொடுத்து ஊரிலுள்ள முக்கியமான பெரிய மனிதர்களுக்குச் சொல்லி யனுப்பி அவர்களிடம் தான் பொன்னம்மாளிட மிருந்து கிரகித்த விர்த்தாந்தத்தைச் சொல்லி அவளு டைய பிதற்றுதலைக் கொண்டு அதை ருசுப்படுத்த, ஊரார் அனைவரும் சங்கரியையும், சுப்புவையும், வாயில் வந்தபடி யெல்லாம் திட்டி அவமானம் செய்தார்கள். வைத்தியநாதய்யர் ஈசுவர தீட்சிதரை யும் வரவழைத்து இம்மூன்று பேரையும் சிறைச்சாலை யில் வைக்கும்படி கட்டளையிட்டுவிட்டார். இவர்கள் ஒவ்வொருவரும் ' உன்னாலே வந்தது இவ்வளவும், உன் பெண்ணுக்காக என்னைக் கெடுத்தாயே' என் றும், ' உன்னாலே வந்தது இவ்வளவும், நீதானேயடி யோசனை சொன்னாய் என்றும், சிறைச் சாலைக்குள், ஒருவரை ஒருவர் வைது, திட்டி, மடி பிடித்துக் கை கலந்து சண்டைபோட்டுக் கொண்டிருந்தார்கள். ஈசுவரதீட்சிதர் லஞ்சம் கொடுத்து தான் தப்பிப் போய்விடலாமென்று நம்பி மௌனமாய் ஒரு மூலை யில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.