244 கமலாம்பாள் சரித்திரம் இது நிற்க, வைத்தியநாதய்யர் கிரஹத்தில் நடந்த விருத்தாந்தம் கமலாம்பாளுக்கு எட்டிய பொழுது கமலாம்பாள் ' ஐயோ என்ன பாவம் பண் ணினேனோ , நன்றாய் அனுபவிக்கின்றேன். அவர் களைச் சொல்லக் குற்றமென்ன. என் பாவம் அவர் களை அப்படிக் கொடுமை செய்யத் தூண்டிற்று. அவர்கள் என்ன செய்வார்கள். இந்த அபகீர்த்தியை நம்பி எங்கே அவர் தேசாந்திரமே போனாரோ, அல் லது பிராணனைத்தான் விட்டுவிட்டாரோ. ஐயோ இப்படியும் வருமா ! தெய்வமே அவரை நான் எப் பொழுது காண்பேன்? என் கற்பை அவருக்கு எப்படி ருசுப்படுத்துவேன்?' என்று அழ, சுற்றியிருந்தவர்கள் அவளைத் தேற்றினார்கள். வைத்தியநாதய்யர் இந்தப் பெரிய குடும்பங்கள் இப்படிச் சீர்குலைந்ததைக் கண்டு பரிதபித்து முத்துஸ்வாமியய்யருடைய பெரிய தகப்ப னார் பிள்ளையாகிய மஞ்சக்குப்பம் டிப்டி கலெக்டர் நாராயணசாமி அய்யருக்கு ஒரு தந்தி கொடுத்து அவர் வரும் வரையில் தானே அவர்களுடைய கிரஹ கிருத்தியங்களைக் கவனித்துக்கொண்டு வந்தார். இங்கு இவ்வாறாக . ஒருநாள் ராத்திரி சென்னைமா புரியில் சமுத்திரத்தினுடைய காற்றானது அலைகளின் ஆவேசத்தைத் தானும் அடைந்து குழவிப் பருவத்திற் குரியதோர் குதூ ஹலத்துடன் பலகணிகள் வழியே உள்ளே புகுந்து ஆராய்ந்து ஆராய்ந்து, சீறிச்சிதறி, ஓடியுலாவி, விளையாடப்பெற்ற ஓர் மெத்தை யறை யுள் மெத்தை விரித்து அதன் மீது ஸ்ரீநிவாசனும், லட்சுமியும் பாற்கடற் பள்ளியினமர்ந்தது போல அமர்ந்து 'காமனுமிரதியும் கலந்த காட்சியாமென உள்ளும் புறமும் ஒருமித்து, உரையாடி நகையாடிக். கொண்டிருந்தனர். சிறுதுநேரம் இவ்விதம் உல்லாச மாய்க் களித்துப் பிறகு தாங்கள் வழக்கமாய்ப் படிக் கும் ராமாயணத்தைக் கையில் எடுத்தார்கள். எடுத்து