உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



28 அனர்த்த பரம்பரை. நாலு நாளைக்குப்பிறகு சிதம்பரத்துக்குப் போகும் ரயிலில் ஓர் வசதியான அறையில் கமலாம்பாள், ஸ்ரீநிவாசன், லட்சுமி, சுந்தரம் நாலு பேருமாக உட்கார்ந்திருந்தார்கள். சுந்தரத்துக்கு இப்பொழுது வயது 12 இருக்கலாம். நல்ல புத்திசாலி. வீட்டில் நடந்த சங்கதியெல்லாம் தெரிந்ததின் பேரில் ' அப் பாவை நான் பாக்க வேணும்' என்று அதிக ஆவல் கொண்டு ஸ்ரீநிவாசன் புறப்படும் போது கூடப் புறப் பட்டுவிட்டான். கமலாம்பாளுக்கு ஒரு வேளை அவ னையும் லட்சுமியையும் ஸ்ரீநிவாசனையும் உத்தேசித்தா வது தன் கணவர் உல கவிரக்தியை விட்டு கிர ஹஸ்த மார்க்கத்திற்குத் திரும்பமாட்டாரா என்று எண்ணம். அப்படிப் போகும்போதே ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஸ்ரீநிவாசன் கீழேயிறங்கி ஒருவேளை முத்துஸ்வாமியய்யர்தென்படலாமோ என்ற எண்ணத் துடன் தேடிக்கொண்டு வந்தான். சீர்காழி ஸ்டேஷனி லிறங்கி மழை பெய்து கொண்டிருந்ததால் குடையும் கையுமாய் அவ்வித ஆராய்ச்சி செய்யும் பொழுது விலையுயர்ந்த சரிகைத் தொப்பியும், பளபள என்று மின்னும் கருப்புப் பட்டுச் சட்டையும் மூன்றுகை அகலமுள்ள சரிகை அங்கவஸ்திரமும், தந்தத்தினால் செய்யப்பட்ட கோ முகத்துடன் தங்கப் பூண் பிடிக்கப் பட்ட கைப் பிரம்பும், பட்டுக் குஞ்சரம் கட்டிய துடையும், காலில் திவ்வியமான ஜப்பான் சடாவும், மார்பில் தங்கக் கடியாரச் சங்கிலியும் அணிந்த ஒரு அலங்கார புருஷன் அவனிடம் வந்து குட் மார்னிங்' என்று சலாம் செய்து வயிர மோதிரங்களணிந்த தன்