பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



248 கமலாம்பாள் சரித்திரம் கையால் அவன் கையைக் குலுக்கி ' என்ன சௌக் யமா? நொடுநாளாய் விட்டதே பார்த்து' என்று யோக க்ஷேமங்களை விசாரித்தான். ஸ்ரீநிவாசனுக்கு அந்த மனிதனை முன் பார்த்த ஞாபகமே கிடையாது. ஆனால் அவனை ' நீ யார் ' என்று கேட்பது அலௌகிகமென நினைத்து, தெரிந்தது போல் பாவனை பண்ணி தானும் அவனுடைய யோக க்ஷேமாதிசயங்களை ஜாக்கிரதை யாய் விசாரித்தான. அந்த மனிதன் அவன் கையுடன் கைகோர்த்து உல்லாசமாய் உலவுவதுபோல் அவனைப் பேசிக்கொண்டே நடத்திக் கொண்டு போக, ஸ்ரீநிவா சன் 'ரயிலுக்கு நாழிகையாய் விட்டது போக வேணுமே' என, அந்த மனிதன் 'இல்லை, இன்றைக்கு இன்னும் அரை மணிக்கு இங்கே ரயில் நிற்க வேண்டி யிருக்கிறது. வடக்கேயிருந்து வரும் ரயில் வந்துதான் இது புறப்படவேண்டி யிருக்கிறது. அடே யாரடா 'ப்யூன்' சாமான்களை ஜாக்கிரதையாய்ப் பார்த்துக் கொள்' என்று சேவகனுக்குத் தாக்கீது கொடுத்து விட்டு ' நாம் மழையில் இங்கு நிற்பானேன், இந்த ஸ்டேஷன் மாஸ்டர் வீட்டு வரையில் போய் வரு வோம். நமக்காக அங்கே டிபன் தயாராயிருக்கிறது, போய் சீக்கிரம் வந்துவிடலாம், நீங்கள் ஒன்றும் கவ லைப்படவேண்டாம்; இன்னும் அரைமணி செல்லும் ரயில் போவதற்கு ; நெடுநாளாய்விட்டது 'சார்', தங்களைப் பார்த்து, கடைசியாய் நான் மட்ராசை விட்டு ஊருக்கு வருவதற்கு முந்தின நாள் பார்த்தது' என்று சொல்லி அவனை இட்டுப்போக, ரயில் புறப் பட்டு விட்டது. ஸ்ரீநிவாசன் 'ஐயையோ ரயில் புறப் பட்டுவிட்டதே' என, அவன் ' என்ன பயம் பயப் படுகிறீர்கள் ஐயா! இத்தனை வருஷம் மட்ராசிலிருந்து விட்டு வண்டி ' லைன்' மாற்றுகிறதற்காகப் போகிறது தெரியாதா! அதோ அந்த வண்டி வருகிறதே தெரிய வில்லையா, மணி யடித்தது தங்களுக்குக் கேட்கவில் லையோ?' என்று சொல்லி ஏமாற்றி ஸ்டேஷன் மாஸ்