பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஆள் ஏமாற்றமும் அபாய ரயில் விபத்தும் 249 டர் வீட்டிற்குப் பின்புறமாகக் கூட்டிப்போக, உரு வின கத்தியும் கையுமாய் நின்ற குதிரைப் படைஞர் நால்வர் திடீரென்று ஸ்ரீநிவாசனைத் தூக்கித் தயாரா ”யிருந்த ஓர் குதிரையில் வைத்துக் கை கால்களில் விலங்கிட்டுத் தங்கள் வாகனங்களைத் தட்டி விட்டார்கள். அவனைக் கூட்டி வந்த மனிதனும் ஓர் குதிரையின் மீது ஏறி அவர்களுடன் கூடவே சென் றான். ஸ்ரீநினிவாசனுக்கு வந்த கோபத்துக்கு அள வில்லை. ஆனால் குதிரை போகிற வேகத்தில் அவன் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. தனியே விட்டு வந்த மனைவி, மாமியார், மைத்துனனுக்காக விசாரப் படுகிறான். ஐயோ அவர்கள் என்ன செய்வார்களோ என்று ஏங்குகிறான். இந்த ராக்ஷதப் பயல்களைக் கொன்றுவிடுகிறேன் என்று சபதம் கூறுகிறான். தன்னை வஞ்சித்து வந்த மனிதனை வாயில் வந்தபடியெல்லாம் உரக்கத்திட்டுகிறான். அதைத் தவிர அவன் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. இது நிற்க, ரயிலில் உள்ளவர்கள் அவன் வராமல் ரயில் போவதைக் கண்டு அலறி வண்டியை விட்டுக் கீழேவர எத்தனிப்பதைக் கண்டு ரயில் வேலைக்காரன் கதவை பலமாய்ச் சாத்தி' இறங்கக் கூடாது, வண்டி போகிற பொழுது இறங்கக் கூடாது' என்று அதட்ட, அவர்கள் உள்ளே உட்கார்ந்து அச்சத்துடன் அழ ஆரம்பித்தார்கள். கூடவிருந்த மனிதர்களுள் ஒருவர் அம்மா பயப்படாதேயுங்கள். அடுத்த ஸ்டேஷனுக்கு போய் இறங்கிக்கொண்டு தந்தி கொடுத்தால் மறு ரயிலில் அவர் வந்து விடுவார். ராத்திரி எட்டுக் குள் நீங்கள் இவரைப் பார்க்கலாம். தைரியமாய் இருங்கள். இன்னும் சிறிது தூரந்தான் இருக்கிறது, விசாரப்படவேண்டாம். நாங்கள் எல்லாரும் இருக் கிறோம்' என்று தைரியம் செல்லிக் கொண்டு வரும் போதே திடீரென்று ஒரு பாலம் படார் என்ற சப்தத்