பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



250 கமலாம்பாள் சரித்திரம் . துடன் உடைந்தது. உடையவே வண்டிகள் சரசர வென்று கீழே அமோகமாகப் போகிற பிரவாகத்தில் ஒன்றின் மேல் ஒன்றாய் விழுந்தன. ஹோ வென்று ஜனங்கள் அலறுகிறார்கள். இஞ்சின் வண்டி மணலும் டன் புதைந்துவிட்டது. மற்ற வண்டிகளுள்ளும் ஜலம் குதித்து புகுந்து ஜனங்களை வெளியிலிழுத்தது. நதியில் மேல் வள்ளம் வேறு வண்டலிட்டு வருகிறது. அப்படியப்படியே ஜனங்கள் ஜலத்தால் அரித்துக் கொண்டு போகப்படுகிறார்கள். குஞ்சு குழந்தைகள், மூட்டை முடிச்சுகள் எல்லாம் பிரவாகத்தில் பிரயா ணம் புறப்பட்டு விட்டன. நீந்தத் தெரிந்த சிலர் கை கால்களை வீசி நீந்துகிறார்கள். கரையோரம் தள்ளப் பட்ட சிலர் தத்தளித்துக் கரையை நோக்கிச் செல்ல முயலுகிறார்கள். நடு ஜலத்தில் அகப்பட்டவர்கள் அரோஹர வென்று முழுகுவதும், மிதப்பதும், அடித் துக்கொண்டு போகப்படுவதுமாயிருக்கிறார்கள். இந் தச் சமயத்தில் இவ்வளவும் போதாதென்று காற்றும் மழையும் வெகு உக்கிரமாய் வீசுகிறது. கரையோ ரத்திலுள்ள மரங்கள் சடசடவென்று முறிந்து ஜலத் தில் விழுகின்றன. அவைகளைப் பற்றிக் கொண்டு சிலர் கரைக்கு ஏறுகிறார்கள். சிலர் அவைகளால் மோதப்பட்டு ஐயோ வென்று அபயக்குரலுடன் முழுகுகிறார்கள். பயங்கரமாய் இடி இடிக்கிறது. ஆகாயம் இருண்டு விட்டது. மின்னல் பளீர் பளீர் என்று மின்னி இருட்டை அதிகப்படுத்துகிறது. கல் லுக்கல்லாய் மழை யடிக்கிறது. ஆகாயத்துக்கும் பூமிக்கும் அமோகமான கோர யுத்தம் போலிருந்தது. காற்று ஹோ என்று யுத்த முழக்கம் முழங்கி ஆதி சேஷனைப் போல சீறி கரைக்குப் போகிறவர்களையும் ஜலத்திலிழுக்கிறது. இடி முழக்கத்தில் பூமி யதிரு கிறது. மரங்கள் இப்படியுமுண்டா வென்று தாரை தாரையாய்க் கண்ணீர் பெருக்குகின்றன. பகலோ இரவோ என்று கூடத் தெரியவில்லை. சூரிய சந்திர